TVK: திமுக கூறும் சமூக நீதியை உறுதி மொழியில் இணைத்த விஜய்! தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்திட்டம் என்ன? 

0
188
TVK: Vijay has linked DMK's social justice with affirmative language! What is the action plan of Tamil Nadu Success Club?

TVK: தவெக கட்சி கொடி அறிமுக விழாவில் திமுக-வினர் பேசும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் அவர்கள் நேற்று (ஆகஸ்ட்22) காலை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து கொடியை ஏற்றி வைத்தார். மேலும் கட்சிக்கான பாடலையும் அறிமுகம் செய்த நடிகர் விஜய் கட்சியின் செயல்திட்டம் கொள்கைகள் குறித்த தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பொழுதே நடிகர் விஜய் அவர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு மூலமாக மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை தன்னுடைய ரசிகர்களை வைத்து செய்து வருகிறார். இருப்பினும் தமிழகம் முழுவதும் செய்வதற்கு இந்த ஒரு அமைப்பு மட்டும் போதாதது என்ற நிலையில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

இதையடுத்து ஆகஸ்ட் 22ம் தேதி கட்சியின் கொடி, கட்சியின் பாடல் ஆகியவை அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதையடுத்து அந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட்22) காலை கட்சி நிர்வாகிகள் 300 பேர் மற்றும் தன்னுடைய தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்.சந்திரசேகர் முன்னிலையில் கட்சிக் கொடி மற்றும் கட்சிப் பாடலை அறிமுகம் செய்து வைத்து பின்னர் அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் உறுதிமொழி வழங்கப்பட்டது. அந்த உறுதி மொழியில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் முதல் மதச்சார்பின்மை, மக்களாட்சி, சமூகநீதி, இறையாண்மை போன்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்தது.

இதில் சமூகநீதி என்ற வார்த்தை திமுக கட்சியால் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களும் திமுக வழியில் அதாவது சமூகநீதியின் வழியில் பயணம் செய்யப் போகின்றது. இதையடுத்து உறுதிமொழி எடுத்த         பின்னர் கட்சிக் கொடி அறிமுகம், பாடல் அறிமுகம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

இதையடுத்து பேசிய நடிகர் விஜய் “இந்த கொடியை உங்கள் இல்லம் மற்றும் இதயத்தில் என்று நான் சொல்லாமலேயே நீங்கள் உங்கள் இதயம் மற்றும் இல்லங்களில் ஏற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும். கட்சிக் கெள்கைகள், செயல்திட்டங்கள் குறித்து இப்பொழுது கூற மாட்டேன். அதற்கென்று ஒரு நாள் இருக்கின்றது. அப்பொழுது கூறுகின்றேன். நம்முடைய கட்சிக் கொடிக்கு என்று தனியாக ஒரு வரலாறும் இருக்கின்றது. அதையும் அன்று கூறுகின்றேன்” என்று கூறினார்.