Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

TVK: விநாயகர் சதுர்த்திக்கு NO சொன்ன விஜய்.. இது அப்படியே விடியா அரசு மாடல்!! விமர்சனம் செய்யும் பாஜக!!

TVK: Vijay said NO to Vinayagar Chaturthi.. It's just Vidya Govt model!! Criticizing BJP!!

TVK: Vijay said NO to Vinayagar Chaturthi.. It's just Vidya Govt model!! Criticizing BJP!!

 

TVK: பெரியார் பிறந்தநாளுக்கு விஜய் அவர்கள் மரியாதை செய்ததையடுத்து இவர் திராவிட மாடலை பின்பற்றுவதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் என்ற பாணியில் விஜய் அவர்கள் பொது நிகழ்ச்சியில் தற்போது தான் தலைதூக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் இன்று பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திடலில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனை பாஜக உள்ளிட்ட இதர கட்சிகள் திராவிட மாடலாக விமர்சனம் செய்து வருகிறது.

எப்படி விடியா அரசு விநாயகர் சதுர்த்தி, சித்திரை திருவிழா உள்ளிட்டவைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் மக்களுக்கு திராவிடத்தை உணர்த்துவதாக தவறானவற்றை சித்தரித்து வருகிறதோ, அதையே விஜய் அவர்கள் பின்பற்றுகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த வகையில் விஜய்யும் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் பெரியார் பிறந்தநாளான இன்று அவரது முன்மொழிகளை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் திராவிட கொள்கைகளை முன்னிறுத்தி திமுகவின் எதிர்ப்பை பிரதானமாக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். இதற்கு பாஜக தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version