TVK vs DMK: திமுக-வுக்கு செட் ஆகாத விஜய்.. ஒரே போஸ்ட் வாயடைத்து போன ஸ்டாலின்!!   

0
640
#image_title

TVK vs DMK: திமுக-வுக்கு செட் ஆகாத விஜய்.. ஒரே போஸ்ட் வாயடைத்து போன ஸ்டாலின்!!

ஆந்திர அரசியலை புரட்டி போட்ட பவன் கல்யாண் போலவே தற்பொழுது விஜய்யும் தனது பயணத்தை தொடங்க ஆரம்பித்துள்ளார்.கடந்த வருடம் ஆந்திர எதிர்க்கட்சி தலைவர் நாயுடுவை கைது செய்த பொழுது பவன் கல்யாண் கொந்தளித்து முதல்வர் ஜெகன்மோகனையே எதிர்த்து நடைப்பயணம் மேற்கொண்டார்.இது ஆந்திரா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதுமட்டுமின்றி
முதல்வரயே பகிரங்கமாக எதிர்த்த பவன் என ஆணித்தரமாக மக்கள் மத்தியில் பதிவாகிவிட்டது.

இது அனைத்துமே இவரது அரசியல் வெற்றி பெற அடுத்தடுத்த வாய்ப்புகளாக அமைந்தது என்றே கூறலாம்.அந்த வகையில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகிறது.அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தனது ட்விட்டரில் வாழ்த்து செய்திகள் மட்டும் கூறி வந்த விஜய் தற்பொழுது கண்டனம் தெரிவிக்கவும் ஆரம்பித்துள்ளார்.கள்ளச்சாராய விவகாரம் மிகவும் வேதனை அளிக்கும் விதமாக உள்ளது.இது அனைத்தும் அரசின் அலட்சியம் தான்.இதுபோல மேற்கொண்டு எந்த ஒரு சம்பவமும் அரங்கேறாமல் இருக்க கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.இதன் மூலம் விஜய் அவர்கள் ஆளும் கட்சியை எதிர்ப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

எப்படி ஆந்திராவில், இம்முறை ஜெகன் அரசியலையே பவன் அவர்கள் சரிய வைத்தாரோ அதனை போலவே விஜய்யும் தனது செயலை ஆரம்பித்துள்ளார்.அணை கட்டும் விவகாரம் என தொடங்கி நீட் தேர்வு வரை பல இன்னல்களை தமிழகம் சந்தித்து வரும் நிலையில் எதற்கும் விஜய் குரல் கொடுக்கவில்லை.அரசின் இந்த நடவடிக்கையை மட்டும் அலட்சியம் காட்டுகிறது என்று சுட்டிக்காட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.இதிலிருந்தே ஆளும் கட்சியை எதிர்ப்பது தெரிகிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.