Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக-வை சுக்குநூறாக்கும் தவெக!! விஜய்யின் மாஸ்டர் பிளான்.. இனி ஆட்டமே மாற போகுது!!  

TVK will make DMK a hundred!! Vijay's master plan.. Now the game is going to change!!

TVK will make DMK a hundred!! Vijay's master plan.. Now the game is going to change!!

திமுக-வை சுக்குநூறாக்கும் தவெக!! விஜய்யின் மாஸ்டர் பிளான்.. இனி ஆட்டமே மாற போகுது!!

நடிகர் விஜய் திரையுலகை விட்டு அரசியலில் முழுமையாக ஈடுபட போவதாக கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார். அந்த வகையில் கட்சியின் பெயர் உள்ளிட்ட  அனைத்தையும் வெளியிட்டார். மேற்கொண்டு லோக்சபா தேர்தல் இடைத்தேர்தல் என எதிலும் போட்டியிடப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதனிடையே திமுக அதிமுக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுடன் எவற்றில் கூட்டணி வைக்கும் என்பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இவர் அரசியலில் நுழைந்ததும் பாஜக அதிமுக திமுக என அனைத்து கட்சிகளும் நல்ல வரவேற்பு அளித்தனர். விஜய்க்கு அதிகப்படியான இளைஞர்களின் செல்வாக்கு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதனை தனக்கு பக்கபலகமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் எண்ணி வருகிறது. ஆனால் விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் பேச்சும் திமுகவிற்கு எதிரானதாகவே உள்ளது.

கல்வி விருது வழங்கும் விழாவில் கூட போதைப்பொருள் ஊடுருவல் கள்ளக்குறிச்சி விவகாரம் என அவரது பேச்சில் திமுகவை சுட்டிக்காட்டி பேசுவது வெளிப்படையாகவே தெரிந்தது. இதனைத் தொடர்ந்து பாஜகவையும் எதிர்ப்பது போல நீட் வேண்டாம் என்று கூறியிருந்தார். இதனையெல்லாம் வைத்துப் பார்க்கையில் தமிழக வெற்றிக் கழகமானது அதிமுக அல்லது நாம் தமிழர் உடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

மேற்கொண்டு சட்டமன்றத் தேர்தலை நேரடியாக எதிர் கொள்ளப் போவதாக தெரிவித்திருப்பதால் தற்போதிலிருந்தே கட்சி ரீதியான முடிவுகளை முன்கூட்டியே எடுக்க உள்ளார். அந்த வகையில் அதிகப்படியாக மக்களுடன் மக்களாக இணைய வேண்டும் என்பதே அவரின் முதல் திட்டமாக உள்ளதாம். தற்பொழுது 4 பெரிய மாநாடுகள் நடக்கப்போவதாகவும் அதிலும் குறிப்பாக முதல் மாநாடு திருச்சி மாவட்டத்தில் தான் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மக்களோடு மக்களாக நடைபயணம் சென்று அவர்களின் குறை மற்றும் அரசு சார்ந்த பல நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் கலந்தோசிக்க உள்ளாராம். இவ்வாறு செய்வதன் மூலம் மக்களின் வாக்குகளை எளிமையாக தற்போதையிலிருந்து கவர முடியும் என்ற திட்டத்தை விஜய் வகுத்துள்ளதாக கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி மாநாடு நடத்துவதற்கான இடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடம் கலந்தோசிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

Exit mobile version