BJP NTK: அதிமுகவும் பாஜகவும் வரப் போகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு என்று கூறினாலும் நாம் தமிழர் சீமான் தற்சமயம் பாஜகவுடன் இணக்கத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி மும்மொழி கொள்கையிலும் எடப்பாடி பாஜக-விற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கூட்டணி வைப்பதென்பது சந்தேகத்திற்குரிய விதமாக அமைந்துள்ளது.
இப்படி இருக்கும்போது அதிமுகவின் சீனியர் சிட்டிசன்கள் கட்டாயம் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் இந்த முறையும் எட்டாவது முறையாக தோற்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்களாம். அதேபோல விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றாலும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்க வேண்டும், அந்த வகையில் தவெக அதிக அளவு டிமாண்ட் செய்துள்ளது. பாஜக அதிமுகவை கழட்டிவிடும் சந்தர்ப்பத்தில் தான் தற்பொழுது சீமான் உள் நுழைந்துள்ளார்.
இதற்கு பல எடுத்துக்காட்டுகள் கூறலாம், பொது நிகழ்ச்சிகளில் பாஜக குறித்து பெரும்பாரியான கருத்துக்களை தவிர்த்து வருகிறார். அதுமட்டுமின்றி அதிமுக உட்பட பலரும் எதிர்க்கும் தொகுதி வரையறைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அரசானது அனைத்து கட்சி பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை அடுத்து சீமானும் கலந்து கொள்ளவில்லை.
இது இவர்களுடன் இணைய போவதை அப்பட்டமாக காட்டிக் கொடுத்துள்ளது. இதுகுறித்து யூகித்துக் கொண்டிருக்கும் வேலையில் அடுத்ததாக இவர்களே பாதை அமைத்து கொடுத்துவிட்டனர். அதுதான் அண்ணாமலை சீமானை சந்திக்கும் தருணம் கிடைத்தபோது, அவரிடம் கை குலுக்கி இதே போல ஸ்ட்ராங்காக போராடுங்கள் என்று கூறியுள்ளார். இது அரசியல் கட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை வெளிநகர்த்தி நாம் தமிழர் கட்சியை உள் நுழைத்தாலும் பாஜகவிற்கு போதிய மதிப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.
அதிமுக அளவிற்கு நாம் தமிழர் கட்சியானது பெருவாரியாக மக்கள் இடத்தில் இணக்கமாக இல்லை. இதனால் பாஜக மீண்டும் சரிவை சந்திக்கும். அதிமுகவும் வேறு வழியின்றி மாற்றுக் கட்சியினரை கூட்டணிக்காக நாட வேண்டியிருக்கும்.