Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஹைதி அதிபரின் கொலை வழக்கில் திருப்பம்! அமெரிக்கர்கள் உட்பட 28 பேர் கைது!

Twist in Haitian president's murder case! 28 arrested, including Americans

Twist in Haitian president's murder case! 28 arrested, including Americans

ஹைதி அதிபரின் கொலை வழக்கில் திருப்பம்! அமெரிக்கர்கள் உட்பட 28 பேர் கைது!

கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ். 55 வயதான இவர்  நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தின் போது அவரது மனைவியும் படுகாயம் அடைந்தார். மேலும் அவர் விமானத்தில் எடுத்துச் சென்று அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் அந்த நாட்டையே உலுக்கியது. இந்த கொலையில் சந்தேக குற்றவாளிகள் என கருதப்பட்ட 4 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கடந்த புதன்கிழமை அதிரடியாக சுட்டுக்கொன்றனர். ஆனாலும் அதிபர் கொலையில் தொடர்புடையவர்கள் குறித்து, தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் 28 பேர் கொண்ட குழு அதிபர் ஜோவனல் மோயிஸ் கொலையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

28 பேரில் 26 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் கைதியை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க நாட்டவர்கள் என்றும் தெரிவித்தார். அந்த 28 பேரில் 15 கொலம்பியர்கள் மற்றும்  இரண்டு அமெரிக்கர்கள் என மொத்தம் 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுவிட்டதால், மீதமுள்ள 8 பேரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என போலீஸ் அதிகாரி லியோன் சார்லஸ் தகவல் தெரிவித்தார். ஜோவனல் மோயிஸ் கொல்லப்பட்டதை அடுத்து அந்த நாட்டில் தற்போது தேசிய நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பிரதமர் கிளாட் ஜோசப் மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளதால் கையில் போலீஸ் அதிகாரத்தை ராணுவம் கையில் எடுத்துக் கொண்டுள்ளது.

Exit mobile version