Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ட்விட்டர் ப்ளூ டிக் கலர் மாற்றம்! எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்!

twitter-blue-tick-color-change-information-released-by-elon-musk

twitter-blue-tick-color-change-information-released-by-elon-musk

ட்விட்டர் ப்ளூ டிக் கலர் மாற்றம்! எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்!

ட்விட்டரை எலான் மஸ்க் என்பவர் வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றார்.அந்த வகையில் பிரபலங்கள் ,புகழ்பெற்றவர்கள் என ட்விட்டர் கணக்கை அதிகாரபூர்வ கணக்குகளாக அறிவிக்க ப்ளூ டிக் முறை பின்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் ப்ளூ டிக் கணக்குகளை பெற கட்டணமும் மாதந்தோறும் செலுத்த வேண்டும்.அந்த கட்டணத்தையும் எலான் மஸ்க் உயர்தினார்.முன்னதாக ப்ளூ டிக் சேவை பெறுவது என்பது சற்று கடினமாக இருந்தது.ஆனால் தற்போது அவை  சற்று சுலபமானதால் யார் வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தினால் ப்ளூ டிக் வசதி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது.

அதனை தவறாக பயன்படுத்தி  சிலர் போலி தகவல்களை  பரப்பி வருகின்றனர் என பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வந்தது.அதனால் புதிய வழிமுறையாக பொய்யான கணக்குகளை வைத்து போலி செய்திகளை பரப்பினால் கட்டண தொகையும் திருப்பி தரப்பட்ட மாட்டாது.அவர்களின் கணக்கு நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ட்விட்டர் ப்ளூ டிக் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து பல்வேறு ஆலோசனை நடத்திய எலான் மஸ்க் ப்ளூ டிக்கிற்கு மாற்றாக கோல்ட் ,க்ரே,ப்ளூ என மூன்று நிறங்களில் செக் மார்க் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கோல்ட் செக் மார்க் நிறுவனங்கள் பயன்படுத்தும் அதிகாரபூர்வ கணக்குகளுக்கு வழங்கப்படும்,க்ரே செக் மார்க் அதிகார பூர்வ அரசு கணக்குகளுக்கு ,ப்ளூ செக் மார்க் தனிநபர் கணக்குகளுக்கு வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து கணக்குகளும் முதலில் ட்விட்டர் குழுவால் சரிபார்க்கப்பட்டு பிறகு எந்த கணக்கிற்கு எந்த செக் மார்க் வழங்கப்படும் என பிரித்து தரப்படும்.

இவை நடைமுறைக்கு வந்த பிறகு ப்ளூ டிக் கணக்கு பயன்படுத்துபவர்கள் பிரபலங்களை போல் பெயர் மாற்றினால் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என அறிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து பல்வேறு கலர்களில் செக் மார்க் நடைமுறைக்கு வரும் என நிபுணர்கள் கூறியுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version