ட்விட்டர் மீது போக்சோ புகார்! மறுப்பு தெரிவித்த நிறுவனம்!

0
125
Twitter Locked By Pokco

ட்விட்டர் மீது போக்சோ புகார்! மறுப்பு தெரிவித்த நிறுவனம்!

சமீப காலமாக பெண்கள் மீதும் சிறு குழந்தைகள் மீதும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. எங்கு பார்த்தாலும் இதை பற்றிய செய்திகளே அதிகம் வெளி வந்த வண்ணம் உள்ளது. அதற்கு இணையங்களே பெரும் பங்கு வகிப்பதாக பலதரப்பட்ட குரல்கள் எழுந்த நிலையில், மத்திய அரசு தற்போது அனைத்து இணையதளங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப கொள்கையை ஏற்க வேண்டும் மற்றும் வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தது.

கடந்த சில மாதங்களாகவே இதன் காரணமாக பல கருத்துவேறுபாடுகள் அரசுக்கும் அந்த நிறுவனங்களுக்கும் தொடர்ந்தது. மேலும் இதை பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களும் ஏற்றுக்கொண்ட நிலையில், ட்விட்டர் நிறுவனம் அரசின் கொள்கைக்கு ஒத்துழைக்காமல் இருந்து வந்தது குறிப்பிடத் தகுந்தது.

தற்போது திடீரென ட்விட்டர் பதிவில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையத்தில் ஜூன்29ம் தேதியான நேற்று ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் டெல்லி போலீசார், டுவிட்டர் இந்தியா மற்றும் டுவிட்டர் கம்யூனிகேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் ஆணையம் சமர்பித்த ட்விட்டர் பக்கங்கள், டுவிட்டர் வெளியிட்ட படங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதை ட்விட்டர் நிறுவனம் இல்லை என்று மறுப்பு தெரிவித்து உள்ளது.மேலும்  சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை டுவிட்டர் நிறுவனம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் சிறுமிகளின் ஆபாச படங்களை உடனடியாக ட்விட்டரில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.