Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் ட்விட்டர் லோகோ மாற்றம்!! எலான் மாஸ்க் அதிரடி!!

Twitter logo change again!! Elon Musk in Action!!

Twitter logo change again!! Elon Musk in Action!!

மீண்டும் ட்விட்டர் லோகோ மாற்றம்!! எலான் மாஸ்க் அதிரடி!!

ட்விட்டர் என்ற இணையதள நிறுவனத்தை எலான் மாஸ்க் இயக்கி வருகிறார். இந்த நிறுவனம் பல கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. எலான் மாஸ்க் ட்விட்டரை வாங்கிய பின் அதில் புதிய அதிரடி பல மாற்றங்களை செயல்படுத்திவருகிறார்.

இதன் மூலம் தங்களின் கருத்துகளை பதிவு செய்யவும் மற்றும் பிற கணக்குகளை பின்தொடரவும் முடியும். மேலும் ட்விட்டரை சிறப்பிக்க அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சில மாற்றங்களை சில நாட்கள் முன் செய்து இருந்தார். அந்த மாற்றத்தில் டிவிட்டரின் லோகோ மாற்றியமைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மீண்டும் அந்த மாற்றங்களுக்கு தனித்துவம் அளித்து வணிக ரீதியாக வருமானத்தை ஈட்டுவதற்கு மீண்டும் மாற்றம் செய்துள்ளார். முதல் ட்விட்டர் நிறுவனம் நீல நிற குருவியின் இலச்சின் இருந்தது. அந்த நீல நிற குருவி நீண்ட நாட்கள் இருந்தது. அதனை தொடர்ந்து சில நாட்கள் முன் மாற்றி கருப்பு மற்றும் வெள்ளை நிற எக்ஸ் இலச்சினையை அறிமுகம் செய்தார்.

அந்த மாற்றத்தை பலர் விமர்சனம் செய்தார்கள். அதனை மீண்டும் மாற்றி அதற்கு இறுதி வடிவத்தை கொடுத்துள்ளார். மேலும் ஏற்கனவே இருந்த எக்ஸ் இலச்சினையை சற்று அடர்த்தி செய்து சில மாற்றம் செய்து புதிய இலச்சினை வடிவமைத்துள்ளார். அதனை தொடர்ந்து ட்விட்டர் பதிவுகள் அனைத்து டவிட்கள் என்று கூறப்படட்டது. மேலும் வைகளை தற்போது எக்ஸ்கள் என்று அழைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version