டுவிட்டரில் இனி இந்த வசதி கிடையாது! எலான் மஸ்க் அதிரடி!

0
176

டுவிட்டரில் இனி இந்த வசதி கிடையாது! எலான் மஸ்க் அதிரடி!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான  எலான் மஸ்க் டுவிட்டர்  நிறுவனத்தை வாங்கினார் அதன் பிறகு அவர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார். மேலும் ஆள்குறைப்பு  நடவடிக்கைகளிலும் இறங்கினார். அதைத் தொடர்ந்து ப்ளூடிக்  கணக்குகளுக்கு வழங்கப்படும்  கட்டணத்தையும் அதிரடியாக உயர்த்தினார். முன்பு ப்ளூடிக் கணக்குகள் பெறுவதற்கு சற்று கடினமாக இருந்து வந்த நிலையில் தற்போது அவை பெறுவது சுலபமாகப்பட்டது.

அதனால் போலி தகவல்களை பரப்புவது அதிகரிக்கப்பட்டது. மேலும் ப்ளூடிக் கணக்குகளை தற்காலிகமாக நிறுத்தி ப்ளூடிக் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு கலர் நிர்ணயம் செய்து அறிவிப்பை வெளியிட்டார். அதனை  தொடர்ந்து ட்விட்டர் குழுக்கள் அனைத்து கணக்குகளையும் சரிபார்த்து யாருக்கு எந்த செக் மார்க் வழங்க வேண்டும் என்று பிரித்து வழங்கப்படுவார்கள்.டுவிட்டரின் பங்களிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக கேரக்டர் வரம்பு ஆயிரமாக மாற்றும்  நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டரில் வெறுக்கத்தக்க  பேச்சு, குழந்தைகள் சித்திரவதை, தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு ஆலோசனை குழு கடந்த ஆறு ஆண்டுகள் முன்பு அமைக்கப்பட்டது.

வெறுப்பு துன்புறுத்துதல்  மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் வழிகாட்டுதலை இந்த குழு வழங்கி வந்தது. நிலையை ஆபத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ட்விட்டரின் சிறப்பு ஹேஷ்டேக் சேவையை தற்போது எலன் மாஸ்க் அதிரடியாக நீக்கியுள்ளார். இது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு உள்ளது. ஒருவேளை அந்த சிறப்பு சேவை திறம்பட அமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்ற தகவலும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.