Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இளம்பெண் சசிகலா இறப்பு தொடர்பாக தர்மபுரி எம்பி டுவிட்டரில் நெத்தியடி பதிவு!

செங்கல்பட்டு மாவட்டம் நைனார் குப்பம் பகுதியைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணை சகோதரர்கள் இருவர், குளிக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டினர். கடந்த நான்கு ஆண்டுகளாக அப்பெண்ணை பலவந்தமாக கற்பழித்து வந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களின் காரணமாக அப்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த வழக்கில் தொடர்பான இருவரில் ஒருவர் திமுக இளைஞரணியைச் சேர்ந்தவர். பெரியாரை ஏற்று பெண் சுதந்திரம் பேசும் திமுகவினர், நடைமுறையில் அப்பாவி இளம்பெண்களின் வாழ்க்கையை சூரையாடும் காமுகர்களாக மாறியிருக்கும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக திமுக கட்சியின் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், நைனார்குப்பம் சசிகலா தற்கொலையில் சந்தேகம் மற்றும் மிரட்டபட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் நிலையில் உண்மையான குற்றவாளிகளை(எங்கள் கட்சியை சார்ந்தவராகஇருந்தாலும்) கண்டறிந்து உரிய தண்டனை வழங்கபட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Exit mobile version