குடியரசு தலைவரை அவமானம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி? உண்மையை உடைத்த ட்விட்டர் நிறுவனம்!

0
128

நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி இன்று பதவியேற்கிறார். குடியரசுத் தலைவராக பதவி காலம் முடிவடைந்து வெளியேறும் ராம்நாத் கோவிந்துக்கு நாடாளுமன்றத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

இதில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், என்று பலரும் பங்கேற்றார்கள்.

இந்த நிகழ்வின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி அவமானம் செய்வதாக தெரிவித்து வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களை எதிர்க்கட்சி பிரமுகர்களும் தங்களுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட காணொளியில் குடியரசுத் தலைவர் நடந்து வந்து பிரதமர் உள்ளிட்ட ஒவ்வொரு தலைவருக்கும் வணக்கம் செலுத்தி வருகிறார்.

சில வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த காணொளியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வணக்கம் செலுத்தும் போது பிரதமர் அவருக்கு பதில் வணக்கம் செலுத்தாமல் கேமராவை பார்ப்பது போன்ற அர்த்தத்தில் இருக்கிறது.

இந்த காணொளியை ஏமாற்றி கட்சி தெலுங்கானா ராஷ்டிரிய சமாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரமுகர்கள் பகிர்ந்து குடியரசுத் தலைவருக்கு பிரதமரும் மரியாதை செலுத்தாமல் அவமானம் செய்து விட்டார் என கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், கிராப் செய்யப்பட்ட இந்த வீடியோ தவறான அர்த்தத்தில் பகிரப்படுவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அதோடு இந்த நிகழ்ச்சியின் முழு காணொளியும் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் குடியரசு தலைவர் நடந்து வந்து வணக்கம் செலுத்திய போது அதற்கு முன்னரே பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு பதில் வணக்கம் செலுத்தி விடுகிறார். வைரலான வீடியோவின் முந்தைய சில நிமிடங்களில் இது வருகின்ற நிலையில், அந்த பகுதியை வெட்டி பிற்பகுதி மட்டும் பரப்பப்பட்டு வந்துள்ளது.

அதோடு குடியரசுத் தலைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் வணக்கம் செலுத்தும் புகைப்படத்தை குடியரசுத் தலைவர் மாளிகை ட்விட்டர் பக்கமும் வெளியிட்ருக்கிறது.