Rameswaram: இராமேஸ்வரத்தில் பெண்கள் உடை மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த இருவர் கைது.
இந்தியாவில் கங்கைக்கு அடுத்த படியாக புனிதமாக கருதப்படும் இடம் ராமேஸ்வரம் ஆகும். இங்கு உள்ள ராமர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள். குறிப்பாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக பேர் வருவார்கள். ராமேஸ்வரம் ராமர் கோவிலில் இருக்கும் புனித தீர்த்தங்களில் நீராடுவது என்பது புனிதமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை வைத்துக் கொள்ள ஏதுவாக லாக்கர் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறையை அப்பகுதியில் பலர் நடத்தி வருகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு இளம் பெண்கள் உடை மாற்றும் அறையில் சந்தேகம் வராத வகையில் மைக்ரோ கேமரா கேமராவை பொருத்தி விடியோ எடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வடமாநில பெண் அளித்த புகாரின் பெயரில் போலீசார் நடத்திய சோதனையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணா, மீரான் மைதீன் நடத்திய வரும் பெண்கள் உடை அறையில் மைக்ரோ கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கைப்பற்றப்பட்ட செல் போனில் 120 வீடியோக்கள் சிக்கி இருக்கிறது. அவர்கள் பல ஆண்டுகளாக இந்த இழிவான செயலை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும், எடுக்கப்பட ஆபாச வீடியோக்களை இணையத்தில் விற்று இருக்கிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இராமேஸ்வரத்தில் பல ஹோட்டல்கள் மற்றும் காட்டேஜ்கள், இயங்கி வருகிறது. அவற்றில் போலீசார் சோதனை நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.