Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய இரண்டு பேருந்திற்கு தீ வைப்பு!! 

Two buses used by security forces set on fire in Manipur!!

Two buses used by security forces set on fire in Manipur!!

மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய இரண்டு பேருந்திற்கு தீ வைப்பு!!

மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இதுவரை  இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. சில நாட்கள் முன்பு  இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக தகவல் வந்திருந்து.

இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தலைநகர் இம்பாலில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் இந்த மாவட்டம் உள்ளது. மே 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை வெடித்தது. அதில் இருந்து மணிப்பூர் எரிந்து வருகிறது. 3-ந்தேதி வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதால், அதுதொடர்பான தாக்குதலாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் முக்கிய குற்றவாளி இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்கள் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது வரை  வன்முறை நீடித்து வரும் நிலையில் நேற்று பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய இரண்டு பேருந்திற்கு வன்முறையில் ஈடுப்பட்ட ஒரு கும்பல் தீ வைத்துள்ளது.

ஆனால் அந்த பேருந்துகளில் பாதுகாப்பு படைவீரர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மணமுறையில் இதுவரை 160 க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்து உள்ளார்கள். மேலும் நூற்றுக்கணக்கான பேர் பலத்த காயமடைந்துள்ளார்கள்.

Exit mobile version