ஒரே பெயரில் இரு இணைப்பு.. இலவச மானிய மின்சாரம் ரத்து! திமுக குட்டை போட்டுடைத்த மாஜி அமைச்சர்!
திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்துமின்கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு என விலைவாசியை உயர்த்தி உள்ளதை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக இதனை எதிர்த்து போராட்டம் செய்து வருகின்றது.
அந்த வகையில் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வு கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அவர் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்ததையடுத்து கிட்டத்தட்ட 52% மின் கட்டணத்தை உயர்த்தியதோடு வரும் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆறு சதவீதம் கூடுதலாக உயர்த்த ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அடுத்தடுத்து விலைவாசி உயர்த்தினால் பாமர மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளவதோடு அன்றாட வாழ்க்கையை நடத்துவதே கடுமையாக இருக்கக்கூடும்.
அந்த வகையில் தற்பொழுது மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க கூறுவது இலவச மானியம் மின்சாரத்தை ஒழுங்குமுறை படுத்துவதற்காக அல்ல. அதற்கு மாறாக ஒரே பெயரில் இரு இணைப்புகள் இருந்தால், அந்த இரு இணைப்பிற்கும் இலவச மானியம் மின்சாரம் கிடைக்கும். அவற்றில் ஒன்றை ரத்து செய்வதற்கு தான் இவ்வாறான ஏற்பாடுகள் தற்பொழுது செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பட்ஜெட் கூட்டு தொடரில் மின்சார வாரியத்திற்காக 13 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எதற்காக தற்போது மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது குறித்து திமுக விளக்கி கூறுவதோடு நாங்கள் ஆட்சியில் இருந்த பொழுது மின் இணைப்புடன் மீட்டர் பொருத்தும் வேலைகளை செய்த பொழுது திமுக அதனை பெரிதும் எதிர்த்தது.
தற்பொழுது திமுக ஆட்சி நடக்கும் இந்த வேலையில் அதே செயலை மீண்டும் செய்கிறது, இதற்கான விளக்கத்தையும் தெளிவாக கூற வேண்டும் என்று கூறினார்.