Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆவணங்களின்றி தனியார் பேருந்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்

#image_title

ஆவணங்களின்றி தனியார் பேருந்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்

ஆவணங்களின்றி தனியார் பேருந்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்கத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உரிய ஆவணங்கள் இன்றி தனியார் பேருந்தில் கொண்டுவரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்குவதை தவிர்க்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் தளகாவியில் நேற்று இரவு தேர்தல் பழக்கம் படையினர் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது மும்பையில் இருந்து மங்களூர் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது அந்தப் பேருந்தில் இருந்த ஒரு பையில் 2 கோடி ரூபாய் ரொக்க பணமாக இருந்தது. அனைத்துமே 2000 ரூபாய் நோட்டுக்கள். அந்தப் பையின் உரிமையாளர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் அதிகாரிகள் கேட்ட போது அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லை.

இதைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட சுமார் 50 லட்சம் மதிப்பிலான தங்க வெள்ளி நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Exit mobile version