ஒரே மாதத்தில் இரண்டு நிலநடுக்கங்கள்! அதிர்ச்சியில் ஆழ்ந்த மியான்மர் நாட்டு மக்கள்!
மியான்மர் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் என்பதால் மியான்மர் நாட்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
மியான்மர் நாட்டில் இன்று அதாவது மே 22ம் தேதி மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலபடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.5 அலகுகளாக பதிவானதாக மியான்மர் நாட்டு தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று காலை 8.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 14 கி.மீ தூரத்தில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாக பதிவான.இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் ஏற்படவில்லை என்று தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
மியன்மர் நாட்டில் இந்த மாதம் அதாவது கடந்த மே 2ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்றும் மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டத்தையடுத்து மியான்மர் நாட்டு மக்கள் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.