Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாக்கடையில் கிடந்த இரண்டு பெண் சடலங்கள்! உ.பியில் பரபரப்பு!

அடையாளம் தெரியாத இரண்டு பெண் சடலங்கள் வெள்ளிக்கிழமை அன்று மீருட் என்ற இடத்தில் சாக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பெண் சடலங்கள் கிடந்ததை பார்த்த உள்ளூர் வாசிகள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறை மற்றும் குற்ற பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனடியாக அவர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதை செய்தது யார் என்பதை விசாரிக்க வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தை பற்றி கேசவ குமார் எஸ் பி கூறியதாவது, உடல்கள் வாய்க்காலில் இருந்ததால் அவை வீங்கி இருக்கிறது. அதனால் உடலை அடையாளம் காண்பது என்பது கடினமாக உள்ளது. இருப்பினும் அடையாளம் காண்பது மட்டுமே வழக்கை தெளிவா க்கும்கு என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த சடலங்கள் யாருடையது என்பதைப் பற்றிய புகைப்படங்களை உள்ளூர் கிராம வாசிகள் அவர்களிடம் கேட்டு மற்றும் மற்ற மாவட்டங்களுக்கும் இந்த புகைப்படத்தை அனுப்பி விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் போன நபர்களின் புகார் இருந்தால் தேவையான தகவல்களை தங்களுக்கு ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் காவல்துறை அளித்த கூற்றின்படி உடலில் ஆடை இருந்தது. மேலும் இறந்த பெண்கள் 20 வயதைக் கடந்த ஒருவராக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்கள். நான்கைந்து நாட்களுக்கு முன்பே இந்த பெண்களின் உடல்கள் இங்கு வீசப்பட்டு உள்ளது. மேலும் இந்த பெண்கள் இரண்டு வெவ்வேறு பகுதியில் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.

அதுமட்டுமின்றி அந்த உடல்களில் எந்த ஒரு ஐடியா அல்லது மொபைல் போன்களும் இல்ல. உடல் சிதைந்து விட்டதால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடல்கூறு ஆய்வுக்குப் பின்னரே தகவல்கள் தெரிய வரும் என்று சொல்லியுள்ளனர்.

மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Exit mobile version