கழிவு நீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி இருவர் பலி:முதல்வர் இரங்கல்?

0
130

சயின் ஷா மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் சென்னை பட்டினப்பாக்கத்திலுள்ள சீனிவாசப்புரத்தில் கடந்த 15 ஆம் தேதி கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதிலிருந்து வெளியேறிய விஷவாயுவினால் சயின் ஷா கழிவு நீர்த் தொட்டியில் மயங்கி விழுந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து,கூட சென்ற நாகராஜ் தன் நண்பரை காப்பாற்றும் எண்ணத்தில் உள்ளே விழுந்தவரை காப்பாற்ற சற்றும் சிந்திக்காமல் அவரும் கழுவுநீர்த்தொட்டியில் இறங்கினார். கழிவுநீர் தொட்டியிலிருந்து வெளியேறிய விஷவாயு நாகராஜையும் தாக்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கவே அவ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களது உடல்களை கழிவுநீர்த் தொட்டியில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தியபோது விசாரணையில் குபேந்திரன் என்பவருக்கு சொந்தமான கழிவுநீர் தொட்டி என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் உயிரிழந்த சயின்ஷா மற்றும் நாகராஜின் குடும்பத்துக்கு,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். பின்பு அவர்களது குடும்பங்களுக்கு உதவி தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு காரணமான குபேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.