Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்! மணமேடையில் கையில் குழந்தைகளுடன் மணமகள்களின்  கழுத்தில் தாலி கட்டிய மணமகன்!

Two mangoes in one stone! The bridegroom tied a thali around the bride's neck with children in hand on the wedding table!

Two mangoes in one stone! The bridegroom tied a thali around the bride's neck with children in hand on the wedding table!

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்! மணமேடையில் கையில் குழந்தைகளுடன் மணமகள்களின்  கழுத்தில் தாலி கட்டிய மணமகன்!

ஆந்திர மாநிலம் வைணவம் பழங்குடியினர் இனத்தை  சேர்ந்தவர் மதிவி சக்தி பாபு. சோழ பள்ளியை சேர்ந்தவர் ஸ்வப்ன குமாரி. இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையில்  காதல் மலர்ந்துள்ளது.அப்போது இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.அந்நேரத்தில் ஸ்வப்னகுமாரி கர்ப்பமாகி பெண் குழந்தை ஒன்றும்  பிறந்துள்ளது.

மேலும் சக்தி பாபு அவரது உறவுக்காரர் பெண்ணான குர்ன பள்ளி சுனிதா என்பவரையும் காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். அப்போது சுனிதாவும் கர்ப்பமாகி ஆண் குழந்தையை  பெற்றெடுத்தாள். சுனிதா திருமணமாகாமல் குழந்தை பெற்றெடுத்ததால் அவரது பெற்றோர் சத்திய நாராயண மற்றும் ருக்மணி ஆகியோர் தங்களது மகளுக்கு நேர்ந்த அநீதி குறித்து பழங்குடியின பெரியவர்களிடம் முறையிட்டனர்.

மேலும் பெரியவர்கள் கூடி பஞ்சாயத்தை கூட்டி பேசிய போது சச்சி பாபு சுனிதாவை  திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருமண பத்திரிக்கை அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சத்தியபாபு  கொடுத்து வந்தார். இந்நிலையில் திருமண ஏற்பாடு குறித்து மற்றொரு காதலியான ஸ்வப்னகுமாரிக்கும் அவருடைய பெற்றோர் வெங்கடேஸ்வரலு சம்மக்கா ஆகியோர்களுக்கும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களும் சத்திபாபு வீட்டிற்கு வந்து தங்களது மகளையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறினார்கள். இதற்கும் சம்மதம் தெரிவித்த சக்தி பாபுவின் பெற்றோர் இரண்டு பெண்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஒரு வாலிபர் இரண்டு பெண்களை ஒரே மேடையில் திருமணம் செய்து கொள்ளும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அரசு அதிகாரிகள் திருமணம் நடைபெற இருந்த மணமகன் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் திருமணத்தை நடக்க கூடாது என மணமகனின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அதனால் நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணி முதல் 10 மணி வரை அதிகாரிகள் திருமணத்தை நிறுத்தி விடுவார்கள் என்ற அச்சம் நிலவி வந்தது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பழங்குடியின பெரியோர்கள் அரசு அதிகாரிகளை சமாதானம் செய்து எங்கள் குல வழக்கப்படி இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று காலை மணமகன் மற்றும் மணமகள்கள் திருமண உடைகளை அணிந்து கொண்டு தங்களது குழந்தைகளை கையில் ஏந்தியபடி மணமேடைக்கு வந்தனர்.

பழங்குடியின மரபுப்படி இரண்டு மணமகள்கள் கழுத்திலும் ஒரே நேரத்தில் தாலி கட்டினார். இந்த திருமணத்திற்கு பல்வேறு கிராமங்களை சேர்ந்த பழங்குடியின பெரியோர்கள், பெண்கள், வாலிபர்கள்  கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். சீனிமாவில் வரும் காட்சிகளைப் போல இரண்டு பெண்களை காதலித்து குழந்தை பெற்று இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

Exit mobile version