Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்டாலின் தெரிவித்த தகவலால் எடப்பாடியார் அதிர்ச்சி!

திருவாரூர் நாகை மாவட்ட திமுக சார்பாக தமிழகம் இப்போம் 2021 சட்டசபை தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காணொளி மூலமாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஐ இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு அமைச்சர் என்று தெரிவிக்கிறார்கள். அவருக்குச் சொந்தமான இறால் பண்ணை அமைக்க வேண்டும் என்பதற்காக முடப்பாவி முகத்துவாரத்தை அடைத்து விட்டார். என்று மக்கள் தெரிவிக்கிறார்கள். அது அவருக்கு தெரியுமா அல்லது தெரியாதா இதன் காரணமாக பொதுமக்கள் விளை நிலங்களில் விவசாயம் செய்ய இயலாத நிலை இருந்து வருகின்றது.

தலைஞாயிறு பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தை ஓ. எஸ். மணியன் ஆக்கிரமித்து இருப்பதாக மக்கள் அளிக்கும் புகாருக்கு அவருடைய பதில் என்ன? மருமகன் பெயரில் டெண்டர்கள் எடுத்து வருகின்றார் என கூறப்படுவது உண்மைதானா?கஜா புயலால் தலைஞாயிறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட 500 வீடுகள் ஆனது என் நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கின்றது. என்று தெரிவிக்கிறார்கள் இதில் நடந்த நிதி முறைகேடுகள் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். நாகை மாவட்டம் முழுவதும் மணல் கொள்ளையில் ஈடுபடுவது யார்? அமைச்சருடைய பினாமிகள் இந்த விவகாரத்தில் உயிரை பறிக்கும் வரையில் சென்றதே இதற்கு அமைச்சரின் பதில் என்ன? இவற்றையெல்லாம் நாகை மக்கள் கேள்விகளாக கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அமைச்சருக்கு பணத்தை கொடுத்தால்தான் ஓ எஸ் என்று தெரிவிப்பார் மற்றபடி நோ , மணியன் தான் என்று தெரிவிக்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் காமராஜ் ஆக இருந்தாலும் சரி ஓ.எஸ் .மணியனாக இருந்தாலும் சரி இந்த மாவட்டத்திற்கு எந்த பிரச்சனை இருந்தாலும் அதைப் பற்றிய கவலை அவர்களுக்கு இருந்தது கிடையாது. தங்களை பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டு, அவர்களுடைய பதவியை எவ்வாறு காப்பாற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். சசிகலா விரைவாக விடுதலை ஆகின்றார் எனவே அவருடன் சென்று விடலாமா? அல்லது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடன் ஐக்கியமாகி விடலாமா என்ற குழப்பத்தில் இந்த இரண்டு மந்திரிகளும் இருந்து வருகிறார்கள் .என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார் . தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் அந்த இரு அமைச்சர்களால் மக்களை பற்றி நினைக்க இயலுமா என கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.

Exit mobile version