Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நூதன மோசடியில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் இருவர் கைது!!

#image_title

நூதன மோசடியில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் இருவர் கைது!!

இராமநாதபுரத்தில் அமெரிக்க டாலர் இருப்பதாக கூறி பிரபல டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனத்திடம் நூதன முறையில் ரூபாய் 4 லட்சத்தை ஏமாற்றி தப்பியோடிய பிரபல வட மாநில கொள்ளையர்கள் இருவரை பொதுமக்கள் மற்றும் போலீஸார் பிடித்து விசாரணை.

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் கடந்த 20 வருடமாக ராமநாதபுரம் அருகே உள்ள சோழந்தூர் பகுதியைச் சேர்ந்த அல்பஷாகிர் என்பவர் டிராவல்ஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார்.

அந்த ஏஜென்சியில் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய பாஸ்போர்ட்,விசா பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட் மற்றும் பண பரிவர்த்தனைகள் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் நேற்று மாலை இவருடைய ஏஜென்சிக்கு தனியார் ஹோட்டலில் இருந்து பேசிய நபர் ஒருவர் தன்னிடம் 5000 அமெரிக்க டாலர்கள் இருப்பதாகவும் அதனை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் டிராவல் ஏஜென்சி சேர்ந்த நபர் பணத்தை எடுத்துக்கொண்டு தனியார் ஹோட்டலில் உள்ள அறைக்கு சென்று அங்கிருந்த மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் மற்றும் சேசாத் ஆகியோரிடம் அவர்கள் வைத்த பணத்திற்கு சமமாக நான்கு லட்சத்தி 7500 கொடுத்துள்ளார்.

பின்னர் அவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு பக்கத்து அறையில் டாலர் இருப்பதாகவும் எடுத்து வருவதாக கூறி சென்றுள்ளனர்.

20 நிமிடங்கள் ஆகியும் வராத சூழ்நிலையில் பதறிப்போன அவர் கீழே சென்று வரவேற்பு அறையில் கேட்ட பொழுது அவர்கள் காரில் சென்றதாக கூறியுள்ளார்.

பின்னர் தான் ஏமாந்தது அறிந்த ட்ராவல்ஸ் உரிமையாளர் அருகில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் அவர்கள் ஏறி சென்ற டிராவல்ஸ் ஓட்டுநரிடம் ரகசியமாக பேசி அவர்களை பிடிப்பதற்கு ஏதுவான இடத்தில் காரை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் ராமநாதபுரம் எல்லை பகுதியான திருவாடானை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தியவுடன் அவர்கள் காரை விட்டு இறங்கி தப்பி ஓடியுள்ளனர் பின்னர் ஓட்டுநர் கத்தி கூச்சலிட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் போலிசார் அவர்களை விரட்டி பிடித்து இராமநாதபுரம் கேணிக்கரை போலிசாரிடம் ஒப்படைத்து தற்போது விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே இவர்கள் மும்பை மகாராஷ்டிரா உள்ள இடங்களில் இது போன்ற கொள்ளையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழகத்தில் வட மாநிலத்தவர்களால் பல்வேறு பிரச்சனை‌ உள்ள நிலையில் இன்று நூதன மோசடியில் வடமாநிலத்தவர்கள் இருவர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version