Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு:! மூன்று நபரின் உடல்நிலை கவலைக்கிடம்?

 

ராசிபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழப்பு 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் முனியம்பாளையம்,இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவர்.இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் தண்ணீர் தேக்கி வைப்பதற்காக குடிநீர் தொட்டி ஒன்றை கட்டியுள்ளார்.தொட்டி கட்டும் பணிகள் முடிந்து 20 நாட்கள் ஆன நிலையில் நேற்று மதியம்,தொட்டி கட்ட பயன்படுத்திய முட்டைகளை பிரிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் 5 பேர் வந்திருந்தனர்.

முருகேசன்,ஆறுமுகம்,சிரஞ்சீவி,சஞ்சய்,தவமுருகன் என்ற ஐந்து கட்டட தொழிலாளிகளும் ஒருவரின் பின் ஒருவராக முட்டு பிரிப்பதற்காக தொட்டிக்குள் இறங்கி உள்ளனர்.அப்பொழுது தொட்டியிலிருந்து விஷவாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு முருகேசன் என்பவரும் சஞ்சய் என்பவரும்,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தவமுருகன் சிரஞ்சீவி ஆறுமுகம் ஆகிய 3 பேரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களின் உடல்நிலை மேலும் கவலைக்கிடம் ஆனதால் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தை,மாவட்ட ஆட்சியர்,சமூகநலத்
துறை யினர்,கோட்டாட்சியர் மக்களவை உறுப்பினர் என அனைவரும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

Exit mobile version