Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஈரோடு மாவட்டத்தில் துக்கம் விசாரிக்க சென்ற இருவருக்கு நேர்ந்த கொடுமை! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Two people who went to mourn in Erode district were treated badly! A lot of excitement in the area!

Two people who went to mourn in Erode district were treated badly! A lot of excitement in the area!

ஈரோடு மாவட்டத்தில் துக்கம் விசாரிக்க சென்ற இருவருக்கு நேர்ந்த கொடுமை! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி ராக்கிபாளையம் காந்திஜி விதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரின் மனைவி சரோஜா (60). இருவரும் கோபி அடுத்துள்ள காசிபாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு  துக்கம் விசாரிப்பதற்காக ஸ்கூட்டரில் சென்று உள்ளனர். மேலும் உறவினர் வீட்டில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது நம்பியூர் அருகே உள்ள கே மேட்டுப்பாளையத்தில் இருவரும் வந்து கொண்டிருந்தனர் அதே பகுதியில் லாரி ஒன்று அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்தது.

மேலும் லாரி எதிர்பாராத விதமாக ஸ்கூட்டரின் மீது மோதியது. இந்த விபத்தில் பின்னால் அமர்ந்திருந்த சரோஜா ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்துள்ளார். பின்னால் வந்த லாரி ஆனது சரோஜாவின் மீது ஏறி இறங்கியது இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பழனியப்பன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அக்கம் பக்கத்தினர் பழனியப்பனை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இது குறித்து நம்பியூர் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டு மேலும் அந்த தகவலின் பெயரில் வம்பியூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version