Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரண்டு போலீஸ்-க்கு லத்தியில் சரமாரியாக தாக்குதல்!! ஆறு இளைஞர்கள் கைது!!

Two policemen attacked with lathis!! Six youth arrested!!

Two policemen attacked with lathis!! Six youth arrested!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவரம்பட்டி பாரதியார் தெருவில் வசிபவர்கள் பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா, பாண்டியராஜ், சரவணகார்த்திக், முத்துராஜ். இவர்கள்  நேற்று  காலை 9  மணிக்கு பாரதியார் தெருவில் புகார் மனு விசாரணை தொடர்பாக சென்ற வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி மற்றும் ராம்குமார்  அவர்களை அவர்கள் கொண்டு சென்ற லத்தியை பிடுங்கி அவர்களை சரமாரியாக தாக்குதல் நடத்தினர். 6 பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரர்களை தடுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் கடுமையாக எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் தாக்குதலை நிறுத்துவில்லை. இதில் படுகாயம் அடைந்த போலீஸ் இசக்கி மற்றும் ராம்குமார் இருவரையும் ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  எந்த  காரணத்திற்கு போலீஸ்சாரை தாக்குதல் நடத்தினர் என்று வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த சம்பவம் நடத்திவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் அசோக்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸ்காரர்களை தாக்கியவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த சம்பவத்தில்  பால்பாண்டி (வயது 31), கிளிராஜன் (24), பாஞ்சாலி ராஜா (40) பாண்டியராஜ்(22), நான்கு பேரை தட்டிதுக்கினர். மேலும்  சரவணகார்த்திக்(33), முத்துராஜ்(34) ஆகியோர் தலைமறைவு  ஆனா நிலையில் அவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.

Exit mobile version