Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கவுன்சிலர் கொலை வழக்கில் கைதான இரண்டு உறவினர்கள்!

Two relatives arrested in councilor murder case

Two relatives arrested in councilor murder case

கவுன்சிலர் கொலை வழக்கில் கைதான இரண்டு உறவினர்கள்!

பெங்களூர் மாநகராட்சியில், செலுவாதிபாளையம் வார்டு முன்னாள் கவுன்சிலர் ரேகா, பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவரது கணவர் கதிரேஷ். இவர்களது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். இவர்கள் பெங்களூரு காட்டன் பேட்டை அருகே பிளவர் கார்டன் பகுதியின் அருகே ரேகாவின் வீடு மற்றும் அலுவலகமும் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தன்னுடைய வார்டில் உள்ள ஏழை மக்களுக்கு தினமும் ரேகா உணவுகளை வழங்கி வந்துள்ளார்.

அதேபோல், கடந்த 24-ந் தேதி காலையில் உணவு வழங்கிவிட்டு வீட்டுக்கு சென்ற வழியில், ரேகாவை மடக்கி பீட்டர் மற்றும் சூர்யா ஆகிய 2 பேரும் பொதுமக்கள் முன்னிலையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட ரேகாவின் உடலில் 17 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு இருந்தது. இதுகுறித்து காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படையும் அமைக்கப்பட்டது.

அதன் பின், தலைமறைவாக இருந்த இருவர் பீட்டர் மற்றும் சூர்யாவை காமாட்சி பாளையா அருகே சுங்கதகட்டேயில் வைத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். தற்போது  அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வருகிறார்கள். இவர்களில் பீட்டர், ரேகாவின் வீட்டின் அருகே வசித்து வருவதுடன், அவரே மாநகராட்சி சம்பந்தப்பட்ட சிறிய டெண்டர் பணிகளை எடுத்து செய்து வந்துள்ளார்.

இவர்களிடம் விசாரித்ததன் பேரில், இந்த கொலையில், இவர்கள் மட்டும் இல்லாமல் மேலும் மூன்று பேரும் சம்பந்தப்பட்டதாக சொல்லி உள்ளனர். மேலும் அவர்கள் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவித்தனர். அவர்களின் கூட்டாளிகளான அஜய், ஸ்டீபன், மற்றும் புருஷோத்தமன் மூன்று பேரையும் நேற்றுமுன்தினம்  நள்ளிரவு கைது செய்தனர்.

மாநகராட்சி தேர்தல் விவகாரம் மற்றும் ரேகாவின் குடும்ப விவகாரம் காரணமாகவும் கொலை நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ரேகாவின் கொலைக்கான சரியான காரணம் குறித்து போலீசார் இன்னும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

குறிப்பாக ரேகாவை கொலை செய்ய பீட்டர் உள்ளிட்டோரை சிலர் தூண்டி விட்டு இருப்பதாகவும், கூறுகின்றனர். இதனால் கொலைக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்?  எதற்காக? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மாநகராட்சி தேர்தலில் கதிரேசின் சகோதரி மாலா தனது மகளை நிறுத்த முடிவு செய்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இந்த கொலையில் மாலா, மற்றும் அவரது மகன், மகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து  மாலா,மற்றும் அவரது மகன் அருள், மருமகள் பூர்ணிமாவிடமும் தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ரேகாவின்  மைத்துனியையும்  பெங்களூரு போலீசார் நேற்று  கைது செய்துள்ளனர். மாலாவின் மகன் அருணும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version