Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் மருத்துவக் கல்லூரி விடுதியில் இரண்டு மாணவிகள் தற்கொலை முயற்சி!!! சென்னையில் பரபரப்பு

 

மீண்டும் மருத்துவக் கல்லூரி விடுதியில் இரண்டு மாணவிகள் தற்கொலை முயற்சி!!! சென்னையில் பரபரப்பு…

 

சென்னையில் உள்ள வேப்பேரி பகுதியில் தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ கல்லூரி ஒன்று செய்யப்பட்டு வருகிறது.இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி விடுதியில் பல மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இதில் மதுரை மற்றும் வேலூரைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் இந்தக் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

மேலும் இந்த இருவர்களும் நெருங்கிய உயிர் தோழிகள் ஆவர்.இருவரும் தன் வகுப்பில் படித்து வரும் மாணவர்களிடம் சகஜமாக விளையாட்டுத்தனமாகவும் பழகி வந்ததாக தெரிகிறது இதனால் அவர்கள் இருவரையும் சக மாணவிகள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் தவறானவர்கள் என்று கருதி அவர்களிடம் யாரும் பேசாமல் முகம் சுழித்து கொண்டு ஒதுங்கி ஒதுங்கி வந்துள்ளனர். இந்நிலையில் இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த இந்த இரு மாணவிகளின் ஒருவர் நேற்று மாலை கல்லூரி ஆய்வு கூடத்தில் இருந்து மெர்க்குரி சல்பேட் என்ற வேதிப்பொருளை எடுத்துக்கொண்டு விடுதிக்கு வந்துள்ளார். அப்போது யாருமில்லா நேரத்தில் தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அங்கு வந்த அவரது நெருங்கிய உயிர்த்தோழியான மற்றொரு மாணவியும் நீ இல்லாத உலகத்தில் நானும் இருக்க விரும்பவில்லை எனக் கூறி அதே மருந்தை கொடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அறிந்த மாணவியின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் பிரிந்து வந்தனர். இதனால் அந்த மருத்துவ கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version