Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் தேர்வு!

நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் தேர்வு!

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகின்றது.
அந்நாளில்,ஆசிரியர்கள் கற்பித்தல் மட்டுமின்றி, மாணவர்கள் நலனுக்காக மற்றும் பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு,இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களை தேர்வு செய்து மத்திய மாநில அரசு சார்பில் நல்லாசிரியர் விருது மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவற்றை வழங்கி கௌரவித்து வருகின்றது.

இந்த வகையில் நிகழ்வாண்டிற்கான அதாவது வருகின்ற செப்டம்பர் ஐந்தாம் தேதி நல்லாசிரியர் விருது தருவதற்கான ஆசிரியர் தகுதி பட்டியலை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டுள்ளது.இதில் இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் நல்லாசிரியர் விருதிற்கு 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சரஸ்வதி மற்றும் விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப் ஆகிய இருவருக்கும்,
இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version