Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீக்கிரம் பணக்காரனாக மாற இரு பெண்கள் நரபலி! பெண்ணின் அந்தரங்க பகுதி ரத்தம் மற்றும் உடலை கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட அவலம்!

சீக்கிரம் பணக்காரனாக மாற இரு பெண்கள் நரபலி! பெண்ணின் அந்தரங்க பகுதி ரத்தம் மற்றும் உடலை கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட அவலம்!

மூடநம்பிக்கைகள் தற்பொழுது எந்த அளவிற்கு சென்றுள்ளது என்றால் தங்களின் சுயநலத்திற்காக நரபலி கொடுப்பதற்கு கூட அஞ்சுவதில்லை. கேரளா மாநிலத்தை சேர்ந்த இரு பெண்கள் தான் ரோஸ்லின் மற்றும் பத்மா. இவர்கள் எர்ணாகுளத்தில் லாட்டரி டிக்கெட் விற்று வருகின்றனர். திடீரென்று இருவரும் காணாமல் போய்விட்டனர். இவரது உறவினர்கள் இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பெண்களின் செல்போன் சிக்னல்கள் கடைசியில் எங்கு காட்டுகிறது ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர்.

அவ்வாறு  ஆய்வு செய்ததில் இருவரின் செல்போன் சிக்னலும் திருவல்லா என்ற பகுதியை காட்டியுள்ளது. அதேபோல இவர்களது செல்போனிற்கும் இறுதியில் முஹம்மது ஷபி என்பவர் பேசியுள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. முகமது ஷபி என்பவர் ஓர் போலி மந்திரவாதி. இவர் ஒரு போலி மந்திரவாதி என்று அறியாத பல மக்கள் இவரிடம் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கூறியுள்ளனர். அந்த வரிசையில் கேரள மாநிலம் திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான பகவத்சிங் என்பவருக்கு அதீத கடன் தொல்லை இருந்துள்ளது. இவரது மனைவி முகமது ஷபியை சந்தித்துள்ளார்.

நாங்கள் இவ்வளவு கடனாக இருக்கிறோம் இதிலிருந்து விடுபட்டு விரைவில் பணக்காரர்களாக மாற வேண்டும் ,அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். அப்போது இவர், இரண்டு பெண்களை நரபலி கொடுத்தால் உங்களது ஒட்டுமொத்த பிரச்சனையும் நிவர்த்தி அடையும் என்று கூறியுள்ளார். மேலும் அவ்வாறு நரபலி கொடுப்பதற்கான பெண்களை நானே கூட்டிக் கொண்டு வருகிறேன் அதற்கான பணத்தை மட்டும் கொடுங்கள் என்றும் அந்த ஆயுர்வேத மருத்துவரிடம் கேட்டுள்ளார். இவர்களும் பணத்தை கொடுத்துள்ளனர்.

மேற்கொண்டு நடந்த பூஜையில் லாட்டரி சீட் விற்று வந்த அந்த இரண்டு பெண்களை அழைத்து வந்துள்ளார். மேலும் அந்த இரண்டு பெண்களையும் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்துள்ளனர். பின்பு இந்த பெண்மணிகளின் உடலை துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்டும் உள்ளனர். மீதமுள்ள உடல் பாகங்களை ஆயுர்வேத மருத்துவரின் வீட்டின் பின்புறமே புதைத்துள்ளனர். இந்தப் பெண்களிடம் நான் உங்களை சினிமாவில் நடிக்க வைக்கிறேன் வாங்கள் என்று  ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார். நரபலி கொடுப்பது தெரியாமல் வந்த இப்பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி பெண்களின் அந்தரங்கப் பகுதியை கத்தியால் குத்தி அந்த ரத்தத்தினையும் வீடு முழுவதும் தெளித்துள்ளனர். இந்த நரபலி செய்தியானது கேரளா மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

Exit mobile version