இஎம்ஐ(EMI) செலுத்த இரண்டு வருடம் அவகாசம்:! மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

0
136

இஎம்ஐ(EMI) செலுத்த இரண்டு வருடம் அவகாசம்:! மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பொழுது,அனைத்து மக்களும் வீட்டினுள் முடங்கும் சூழல் ஏற்பட்டது.இதனால் பேங்கில் லோன் எடுத்தவர்களும்,Emi-ல் பொருட்கள் எடுத்தவர்களும்,மாத தவணையை கட்டமுடியாமல் பரிதவித்தனர்.இந்நிலையில்,
மக்கள் நலனை கருத்தில் கொள்வதுபோல்,ரிசர்வ் வங்கியும்,மத்தியஅரசும்,
ஆறுமாதங்களுக்கு,இஎம்ஐ மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட பிற மாதத்தவணை கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்றும், ஆறு மாதங்களுக்கான வட்டியும் வசூலிக்கபடாது என்றும் அறிவித்திருந்தது.

ஆனால் சில தனியார் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பையும் மீறி ஏழை எளிய மக்களிடம் இஎம்ஐ மற்றும் மாத தவணை செலுத்தும்படி கூறியதோடு,
மாதத்தவணையை செலுத்தாமல் விட்டவர்களுக்கு அசலுடன்வட்டியை சேர்த்து வட்டிக்கு வட்டி பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.ஆனால் இதனை ரிசர்வ் வங்கியோ அல்லது மத்திய அரசோ கண்டுகொள்ளவில்லை.இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கானது ஆகஸ்ட் 27 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது,
வங்கிக் கடனுக்காக ஆறுமாத இஎம்ஐ(EMI) சலுகையை அறிவித்துவிட்டு அதனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் வட்டிக்கு வட்டி பணம் வசூலிப்பதா? என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அறிவிப்பின்படி கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆறு மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்தாமல் தள்ளிப்போடும் போது வழக்கமான வட்டியை அசலுடன் சேர்ந்துவிடுவதால், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை தவிர்க்க ஆறு மாதங்களுக்கான வட்டியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்தவழக்கிற்கு மத்தியஅரசு பதில் மனுதாக்கல் செய்யாததை நீதிபதிகள் கண்டித்தனர்.

மத்திய அரசு அறிவித்த பொது முடக்கமே இந்த வட்டி பிரச்சனைக்கு காரணமாக இருக்கும்பொழுது, இதைப்பற்றி ரிசர்வ் வங்கி தான் முடிவு செய்யும் என்று மத்திய அரசு தப்பிப்பதில் ஞாயமில்லை என்றும்,பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இதுபோன்ற பிரச்சினைகளில் மத்திய அரசு தலையிட முடியும் என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதுதொடர்பாக மத்திய அரசு முடிவெடுத்தது பதிலளிக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள்,இந்த வழக்கினை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதை தொடர்ந்து,
இந்த வழக்கானது மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.அந்த பதில் மனுவில் கூறியதாவது,இந்த மாதத் தவணை செலுத்த இரண்டு வருடங்கள் வரை தங்களால் விலக்கு அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடுமையான பிரச்சனையை சந்தித்து வரும் துறைகளை தனித்தனியாக கண்டறிந்து அவற்றை அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வரக்கூடிய பணிகளை செய்யும் வகையினை கண்டறிந்து வருகின்றோம் எனவும் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.