ஒரே ஒரு வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் 3700 பேரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்
கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என்ற விரக்தியைக் கொடுத்து வருகிறது கொரோனா தொற்று.
இதனால் கடந்த ஏப்ரலில் இந்தியாவில் 12.5 கோடி பேர் வேலையிழந்ததாகப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் இரே ஒரு வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக தங்கள் நிறுவனத்தில் வாடிக்கை சேவையில் பணி செய்து வந்த 3700 பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது உபர் (UBER) நிறுவனம். இந்த ஊழியர்கள் உபர் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 14 சதவீதத்தினர் ஆவர்.
ஜூம் (Zoom) வீடியோ கான்ஃபரின்சிங்க் மூலமாக UBER தலைமையகத்திலிருந்து இந்த பணியாளர்களைத் தொடர்பு கொண்டவர்கள் ” இன்று தான் உபருடன் உங்கள் கடைசி வேலை நாளாக இருக்கும்” என்று அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து உபர் தலைமையகத்தின் பீனிக்ஸ் மையத்தின் தலைவர் ராஃபின் சாவேலியோ வீடியோ காலில் பேசுகையில் , தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உபரின் சவாரி வணிகம் பாதிக்கு மேலாக குறைந்துவிட்டது. மேலும், கடினமான மற்றும் துரதிர்ஷ்ட்டவசமான உண்மை என்னவென்றால் எங்கள் ஊழியர்களுக்கு போதுமான வேலை இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், எங்கள் நிறுவனத்தின் இ-பைக்குகள், இ-ஸ்கூட்டர்கள் தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.