Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உபர் நிறுவனத்தின் புதிய வசதி!! காலதாமதத்திற்கு ரூ.7500 இழப்பீடு வழங்க திட்டம்!!

Uber's new feature!! Plans to provide Rs.7500 compensation for delays!!

Uber's new feature!! Plans to provide Rs.7500 compensation for delays!!

டாக்ஸி சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்களில் ஒன்றான உபர் தன்னுடைய பயணிகளுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. சில நேரங்களில் சாலைகளில் ஏற்படக்கூடிய காலதாமதத்தால் பயணிகளின் உடைய பயண நேரத்தில் சிக்கல் ஏற்படுவதாகவும் அதை சரி செய்வதற்காக புதிய வசதியை உருவாக்கி இருப்பதாகவும் உபர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த முக்கிய முடிவை உபர் நிறுவனம் எடுத்ததற்கு சில முக்கிய காரணங்கள் இருப்பதாகவும் அவற்றில் குறிப்பாக விமான நிலையங்களுக்கு செல்லக்கூடிய பயணிகளை அழைத்து செல்ல உபர் நிறுவனத்தின் டாக்ஸி டிரைவர்கள் தயங்குவதாகவும் புகார்கள் வந்ததை அடுத்து விமான நிலையத்திற்கு பயணிக்க கூடிய பயணிகளுக்கு காலதாமதம் ஏற்பட்டால் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க முடிவு செய்து இருப்பதாக உபர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

விமான நிலையத்திற்கு செல்வதற்காக டாக்ஸி கல்லில் பயணிக்க கூடிய பயனர்கள் சாலைகளில் ஏற்படக்கூடிய காலதாமதத்தால் தங்களுடைய விமான பயணத்தை தவற விட்டு விடுவதாகவும் அதனால் விமான நிலையம் செல்ல நினைக்கும் பயணிகளை உபர் டாக்சி டிரைவர்கள் தங்களுடைய டாக்ஸி களில் ஏற்றுக்கொள்ள தயங்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்த இந்த நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது.

மேலும், உபர் நிறுவனத்தின் டாக்ஸியில் பயணிக்க கூடிய பயணிகளில் யாராவது விமான பயணத்தை மேற்கொண்டாலோ அல்லது அப்படி மேற்கொள்வதற்காக செல்லக்கூடிய பயணிகள் தங்களுடைய விமானங்களை தவறவிட்டாலோ அவர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.7500 வழங்க உபர் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதனோடு கூடவே டாக்ஸியில் பயணிக்கும் பொழுது ஏதேனும் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட்டால் ஓபிடி மற்றும் மருத்துவ செலவுகளை அந்நிறுவனமே ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்திருக்கிறது.

Exit mobile version