திமுக தலைமையிலான ஆட்சியில் தற்பொழுது விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வர் ஆவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டதையடுத்து ரஜினிகாந்த் அவர்கள் கடுப்பாகி பேசிவிட்டு சென்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விஜயவாடாவில் நடந்து வந்தது. இதையடுத்து விஜயவாடாவில் நடந்த கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடித்துக் கொண்டு சென்னையில் நடைபெறும் வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை திரும்பினார்.
இதையடுத்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் சில கேள்விகளை கேட்டனர். ரஜினிகாந்த் அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் “வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் யாரெல்லாம் கலந்து கொள்ளவுள்ளனர்” என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் “இசை வெளியீட்டு விழாவில் யாரெல்லாம் வரப் போகிறார்கள் என்பது குறித்து எனக்கு தெரியாது” என்று கூறினார்.
இந்த கேள்வியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் “உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக பதவியேற்பாரா இல்லையா” என்று கேள்வி கேட்கப்பட்டது. இதை கேட்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கடுப்பாகி “அரசியல் தொடர்பான கேள்விகள் எல்லாம் என்னிடம் கேட்க வேண்டாம்” என்று கூறினார்.
தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் “வேட்டையன் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கின்றது. மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலை ஏஐ மூலமாக கொண்டுவந்து பாடவைத்தது நன்றாக இருக்கின்றது” என்று கூறிவிட்டு வேறு எதுவும் கூறாமல் காரில் ஏறி சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கேள்வி குறித்து கேட்க வேண்டாம் என்று கூறியதற்கு காரணம் இருக்கின்றது. சமீபத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின். புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பேசியது தான் இதற்கு காரணம்.
அதாவது அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் “திமுக கட்சியில் சீனியர்கள் அதிகமாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பெயிலாகி இருப்பவர்கள் இல்லை. ரேங்க் வாங்கிக் கொண்டு வகுப்பறையை விட்டு செல்லாமல் இருப்பவர்கள் தான்.
அவ்வாறு ரேங்க் வாங்கிக் கொண்டு திமுக கட்சியில் இருக்கும் நபர்களில் துரை முருகன் என்ற ஒரு நபர் இருக்கிறார். அவர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டியவர்.
அதாவது கலைஞர் கருணாநிதி அவர்கள் ஓரு விஷயத்தை கூறினார் என்றால் அதற்கு துரை முருகன் அவர்கள் அப்படியா சந்தோஷம் என்று கூறுவார். துரை முருகன் ஏன் இப்படி கூறுகிறார் என்று புரிந்து கொள்ள முடியாது. அதாவது கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறியது நன்றாக இருக்கின்றது என்று சந்தோஷம் என்று கூறுகின்றாரா அல்லது கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறியது நன்றாக இல்லை என்று அவர் சந்தோஷம் என்று கூறுகின்றாரா என்பதை புரிந்து கொள்ள முடியாது” என்று கூறினார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் துரை முருகன் அவர்களை பழைய ஸ்டூடன்ட் என்று கூறுகின்றார் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவ துரை முருகன் அவர்கள் “பழைய நடிகர்கள் பற்கள் எல்லாம் போயி தாடி வளர்ந்தும் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தன் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று துரை முருகன் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். இந்த நிகழ்வுதான் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்க வேண்டாம் என்று கோபத்துடன் கூறியதற்கு காரணம் ஆகும்.