Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உதயநிதி ஒரு டம்மி.. தமிழகம் கோமாளிகள் கையில் சிக்கி தவிக்கிறது – அண்ணாமலை ஆவேசம்!

#image_title

உதயநிதி ஒரு டம்மி.. தமிழகம் கோமாளிகள் கையில் சிக்கி தவிக்கிறது – அண்ணாமலை ஆவேசம்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கின்றது. இந்த முறை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை ஓரளவாவது பலப்படுத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் திமுக அமைச்சர்கள் ஊழல்களை அவ்வப்போது ஆதாரத்துடன் வெளியிட்டு வரும் அண்ணாமலை அக்கட்சியின் நிர்வாகத் திறமையை பற்றி கிண்டல் செய்து பேசி இருக்கிறார்.

இன்று தென் சென்னையில் பாஜகவின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

திமுக ஆட்சியில் தமிழகம் வீழ்ச்சியை மட்டுமே சந்தித்து வருகிறது. திட்டங்களை மட்டும் அறிமுகம் செய்யும் ஸ்டாலின் அதை முறையாக செயல்படுத்துவதில்லை. போட்டோவுக்கு போஸ் மட்டும் குடுத்து விடுகிறார் என்று நக்கல் அடித்து பேசினார்.

மேலும் மக்கள் பணத்தை திமுக அரசு வீணடிக்கிறது… அறிமுகம் செய்த எந்தஒரு திட்டமும் வெற்றி கண்டது போல் தெரியவில்லை…

தமிழகத்தில் அமைச்சர் பதவியில் இருக்கும் அனைவரையும் டம்மியாக காட்டி அவரது மகன் உதயநிதியை அறிவாளிபோல் காட்ட முயற்சிக்கிறார் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருக்க கூடிய யாருக்கும் நிர்வாகத்தை சரியாக கையாளத் தெரியவில்லை… தகுதி.. திறமை.. இல்லாத கோமாளிகள் பிடியில் தமிழக மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

குடும்ப ஆட்சியை நடத்தி வரும் ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை துணை முதல்வர் பதவியில் அமர வைக்க பல நாடகங்களை நடத்தி வருகிறார்.

முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை.. அவரது மகன் மீது மட்டுமே அக்கறை… மகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும்.. அதில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வருகிறார்… டம்மி உதயநிதியை மக்கள் முன் புத்திசாலியாக காட்ட ஸ்டாலினும் பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்று அண்ணாமலை காட்டமாக தெரிவித்து இருக்கிறார்.

Exit mobile version