Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உதயநிதிக்கு ஜீனியர் கலைஞர் பட்டம் பார்சல்! சீனியர் உடன்பிறப்புகள் பெருமிதம்!!

உதயநிதிக்கு ஜீனியர் கலைஞர் பட்டம் பார்சல்! சீனியர் உடன்பிறப்புகள் பெருமிதம்!!

கடைசி தொண்டனாக இருந்து இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் வரவு ஆரம்ப கட்டத்தில் பலருக்கு திருப்தி இல்லை. காரணம் அவரிடம் எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாமல் இருந்தது. தற்போது சீனியர் நிர்வாகிகளிடம் நல்ல நகைச்சுவை மற்றும் கட்சி ரீதியான கணிப்புகளோடு பேசுவதை பார்த்து சீனியர் உடன்பிறப்புகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சீனியர்களை ஈர்க்கும் விதமாக செயல்படும் உதயநிதியை பலருக்கு மிகவும் பிடித்துவிட்ட காரணத்தால், ஜீனியர் கலைஞர் என்று பாராட்டு பத்திரம் வாசிக்கின்றனர். தனக்கு எந்த பட்டப் பெயரும் வேண்டாம் என உதயநிதி தெரிவித்துள்ள நிலையில், திமுகவின் மூத்த அரசியல் தலைகள் உதயநிதிக்கு ஜீனியர் கலைஞர் என்று பட்டத்தை கொடுப்பதாக கூறப்படுகிறது.

சினிமா களத்தில் இருந்தவருக்கு அரசியல் களம் செட்டாகுமா என்கிற கட்சியினரின் குறுக்கு கணக்குகளை உடைத்தெரிந்த உதயநிதி. தற்போது பல லட்சம் இளைஞர்களை புதிதாக கட்சியில் இணைக்க ஆயத்தமானது பலருக்கு வியப்பில் ஆழ்த்தியது. அரசியல் அனுபவம் இல்லாத உதயநிதிக்கு பெரிய பொறுப்புகளை எப்படி சமாளிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு தனது அரசியல் பேச்சுகள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்.

ஆரம்ப கட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என்று கட்சியினர் கூறினாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், புகழ் பேசும் பெயர்களை தவிர்த்து நாம் அனைவரும் அண்ணன் தம்பியாக இருப்போம் என்று புகழ்ச்சியினை புறந்தள்ளினார்.

தொடக்க அரசியலில் உதயநிதியை பிடிக்காத சீனியர் நிர்வாகிகளுக்கும் தற்போது பாராட்டக்கூடிய அளவிற்கு தனது அரசியல் பார்வையை மாற்றியுள்ளார் உதயநிதி. அவருக்கான ஜீனியர் பட்டம் கொடுக்கும் மூத்த நிர்வாகிகள் பெருகி வருகின்றனர்.

Exit mobile version