Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உதயநிதி எம்.எல்.ஏ. வின் புதிய அலுவலகம்! இன்று மாலை முதல்!

Udayanithi MLA Vin's new office! From tonight!

Udayanithi MLA Vin's new office! From tonight!

உதயநிதி எம்.எல்.ஏ. வின் புதிய அலுவலகம்! இன்று மாலை முதல்!

சென்னை விருகம்பாக்கத்தில், சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ராஜா தலைமை வகிக்கிறார். விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 10 கிலோ காய்கறிகள், என 2598 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எந்த நேரத்திலும் புகார்களை தெரிவிக்கலாம் என்றும், பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் நம் விருகம்பாக்கம் என்ற பெயரில் செல்போன் ஆப் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது என்றும் கூறினார். மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கிருந்தே இதிலும் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இலவச தொலைபேசி எண்ணிலும் தொகுதி சார்ந்த பிரச்சினைகளை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version