உதயநிதிக்கு பெரியப்பா மீது பொங்கிய திடீர் பாசம்!

0
105

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியில் அமரவேண்டும் என்று திமுக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் எதுவுமே பலனலித்ததாக தெரியவில்லை.அதேபோல தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பிரச்சாரத்தின் பொழுது இந்த தேர்தலில் எங்களுடைய பெரியப்பா முக அழகிரி களப்பணியாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் திமுகவை இந்து விரோத கட்சி என்று ஒரு சிலர் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது கூட இதே குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர், இந்த தேர்தலில் மக்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பார்கள் தமிழக கோவில்களில் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கி குடமுழுக்கு நடத்த இருக்கின்றோம்.

திருவாரூர் தேர் ஓடியதற்கு காரணமே கலைஞர் தான். எங்களுடைய வீட்டில் பிள்ளையார் சிலை இருக்கிறதா இல்லையா என்பது விஷயம் அல்ல பிள்ளையார் சிலை இருக்கும் கருவறைக்குள் அனைத்து சாதியினரும் சென்று வரவேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை தான் அறிஞர் அண்ணா எங்களுக்கு கற்றுக் கொடுத்து சென்றிருக்கிறார். எந்த ஒரு மதத்திற்கும் திமுக எதிரி அல்ல என்று தெரிவித்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கும் இந்தக் கருத்தின்படி பார்த்தோமானால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் செல்லலாம் என்று தெரிவிக்கிறார். உதயநிதி ஸ்டாலின்.ஆனால் இதுவரையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய இந்து கோயில்கள் எதுவுமே கோயில்கள் அல்ல இந்து மத கடவுள்கள் எல்லாம் அசிங்கமாக பொம்மைகள் என்கிற ரீதியில் பேசியது திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் என்பதை அவர் மறந்து விட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்துமத பெண்கள் தொடர்பாக இழிவாக பேசிய திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் இருக்கிறார் என்பதை அவர் மறந்து விட்டாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் சிறுபான்மையினரை உயர்த்திப் பேசுவதாக கருதிக் கொண்டு இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசும் திமுகவை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.இப்படி சந்தர்ப்பத்திற்கு தகுந்தார் போல் பேசும் திமுக எந்த நம்பிக்கையில் மக்களிடையே வந்து வாக்குகளை சேகரிக்க முயற்சி செய்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆனால் இதையெல்லாம் அறியாத பாமர மக்கள் எவ்வளவுதான் திமுகவின் இந்து எதிர்ப்புக் கொள்கை மற்றும் இந்துமத பெண்களை இழிவு செய்தல் போன்றவற்றை எடுத்து கூறினாலும் அதனை புரிந்து கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை.திமுகவைப் பொறுத்தவரையில் கடவுள் மறுப்புக் கொள்கை உள்ள ஒரு கட்சி என்பது தான் தெரியும் ஆனால் அந்த கடவுள் மறுப்புக் கொள்கைகள் ஒளிந்திருக்கும் இந்து மதக் கொள்கைக்கு எதிரான தாட்பரியத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்களின் இந்த அறியாமையைத்தான் திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது.