Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினின் முதல் இலக்கு! 

Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினின் முதல் இலக்கு!

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு என்ன துறை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருந்த நிலையில் அவருக்கு விளையாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அவர் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்த விளையாட்டு போட்டிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் தமிழக அரசு சார்பாக கலந்து கொள்ளவுள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது இவருடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு,ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது

தமிழக முதல்வர் அமைச்சர் என்ற மிகப் பெரிய பொறுப்பை என்னிடம் அளித்துள்ளார். முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களின் ஆலோசனைப்படி அனைவரின் ஒத்துழைப்புடன் எனக்கு அளிக்கப்பட்டு இருக்கும் இந்த பொறுப்பை என்னால் முடிந்த அளவுக்கு சரியாக செய்வேன் என்று பேசினார்.

அந்த வகையில் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்வது தான் எனது முதல் இலக்கு என்றும் அவர் அப்போது தெரிவித்தார். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் என்னுடைய பணிகள் இருக்கும். தமிழக முதல்வர் தங்க கோப்பைக்கான போட்டி வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும். தமிழ்நாட்டில் பீச் ஒலிம்பிக்ஸ் மற்றும் ஏடிபி டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது” என்றும் அவர் அப்போது கூறினார்.

Exit mobile version