கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு விடுத்த உதயநிதி ஸ்டாலின்!!

0
274
#image_title

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு விடுத்த உதயநிதி ஸ்டாலின்!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இளைஞர் நலன் மற்றும்  விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடையே சென்னையில் நேற்று சந்திப்பு நடைபெற்றது. அதில் உதயநிதி ஸ்டாலின்கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி 2023″ – க்கான தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் வழங்கினார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தும் இப்போட்டிகான அழைப்பிதழை வழங்கி உள்ளார்

மேலும் பிரதமருடன் ஆன இந்த சந்திப்பு குறித்து  உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனவரி 19, 2024 அன்று சென்னையில் நடைபெற உள்ள கேலோ இந்தியா இளைஞர் போட்டியின் தொடக்க விழாவிற்கு அழைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

மேலும் தமிழக முதலமைச்சர் மு. ஸ்டாலின் வேண்டுகோளின் படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான நிவாரண மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை வைத்தேன். இதில் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின்போது 2023 ஆம் ஆண்டுக்கான சிஎம் டிராபி விளையாட்டு மற்றும் தமிழ்நாடு நடத்திய ஆசிய மாணவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பை வெற்றிகரமாக நடத்தியதை காட்டும் காபி டேபிள் புத்தகத்தையும் பிரதமரிடம் வழங்கினேன்இந்த கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023, நாட்டின் பெருமைமிக்க அமைப்பு திறனையும், விளையாட்டு துறையில் புகழ்பெற்ற வரலாற்றை நிரூபிக்க மற்றொரு நம்பிக்கை கூடிய வாய்ப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.