டி.ஆர்.பாலு உதயநிதி ஸ்டாலினுக்கு மாமாவா? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்

0
182

டி.ஆர்.பாலு உதயநிதி ஸ்டாலினுக்கு மாமாவா? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வலியுறுத்தப்படாது என்று திமுக தலைவர் கூறி உள்ளார். ஆனால் நடைபெற்று வரும் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவார் என நினைக்கிறேன்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் திமுக தலைவரும் மற்றும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களித்த மதுரவாயல் தொகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சென்னை,போரூரில் நடைபெற்றது.

இதில் முரசொலி மேலாண்மை இயக்குனரான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது,”டி.ஆர்.பாலுவை மாமா என்று தான் கூறுவேன். நான் வராமல் நீ கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்று கேட்டு கொண்டதால் தான் இந்த தேதி மாற்றப்பட்டது.

தமிழக அரசியலில் வெற்றிடம் என்று சில நடிகர்கள் வந்தார்கள். ஆனால் நடந்து முடிந்த தேர்தல் முடிவை பார்த்து விட்டு எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை, திமுக இருக்கும் இடமே வெற்றியின் இடம், இங்கு உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்றும் பேசினார்.

நடந்து முடிந்த தேர்தலுக்காக 28 நாட்கள் 38 தொகுதியில் பிரச்சாரம் செய்தேன். கைராசியில் நம்பிக்கை இல்லை, இந்த வெற்றிக்கு தமிழக வாக்காளர்கள் கைராசி என்றும் சொல்லலாம். நான் அரசியலில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளேன். மக்கள் குறை குறித்து தமிழக எம்.பிக்கள் மனு கொடுக்கின்றனர்.

ஆனால் திட்டங்கள் வேறு இடங்களுக்கு போகிறது. ஓட்டு போடவில்லை என்றால் தண்டிப்போம் என நேரடியாக சொல்கிறார்கள். திமுக எம்எல்ஏக்கள் சொந்த செலவில் 75 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வலியுறுத்தப்படாது என்று திமுக தலைவர் கூறி உள்ளார். ஆனால் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் விரைவில் கொண்டு வருவார் என நினைக்கிறேன்” என்றும் அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அரசியலுக்கு வந்து காணாமல் போனவர் என்று கூறியது கமலஹாசனை தான் என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் டி.ஆர்.பாலுவை எந்த அடிப்படையில் மாமா என்று குறிப்பிட்டார் என்று வாசகர்கள் கற்பனைக்கே விட்டு விடலாம்.