Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜீரோவுக்கும் முட்டைக்கும் வித்தியாசம் தெரியாத உதயநிதி!!! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டி!!!

#image_title

ஜீரோவுக்கும் முட்டைக்கும் வித்தியாசம் தெரியாத உதயநிதி!!! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டி!!!

பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் ஜீரோவுக்கும், முட்டைக்கும் கூட உதயநிதி அவர்களுக்கு வித்தியாசம் தெரியாது என்று பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் நீட் தேர்வு பற்றியும் பேட்டி அளித்துள்ளார்.

என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் இருக்கும் மக்களை சந்தித்து நடை பயணம் மேற்கொண்டு வருகின்றார். ஒவ்வொரு தொகுதிக்கும் செல்லும் அண்ணாமலை அவர்கள் அங்கு மக்களின் மத்தியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து உரையாற்றி வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மருத்துவத்தில் சேர்ந்து படிப்பதற்கு நீட் தேர்வில் 0 சதவீதம் மார்க் எடுத்தால் போதுமானது என்று முட்டையில் நீட் என்று எழுதப்பட்ட ஒரு முட்டையை காண்பித்து பேசினார். இதற்கு தற்பொழுது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அண்ணாமலை அவர்கள் “ஜீரோவுக்கும், முட்டைக்கும் இடையில் உள்ள வித்தியாசம் கூட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தெரியவில்லை. ஜீரோ வட்ட வடிவத்தில் இருக்கும். முட்டை ஓவல் வடிவத்தில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் மக்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டனர்” என்று பேட்டி அளித்துள்ளார்.

Exit mobile version