Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேதனையுடன் ட்வீட் செய்த உதயநிதி ஸ்டாலின்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஓ பன்னீர்செல்வத்திற்கு ராஜா மற்றும் பாலமுருகன் என்ற இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். இதில் ராஜா அதிமுகவில் இருப்பதால் அவர் சற்று பிரபலமானவர்.ஆனால் பாலமுருகன் என்று ஒரு சகோதரர் இருக்கிறார் என்பதே வெளியில் யாருக்கும் தெரியாது .

அவ்வாறு இருக்கையில், ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகன் உடல்நலம் பாதிப்பு காரணமாக, திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று வீடு திரும்பியிருக்கிறார் நேற்று வீடு திரும்பிய அவர் இன்று காலை இயற்கை எய்தினார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வலைதள பக்கத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் திரு பாலமுருகன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். ஓபிஎஸ் அண்ணன் அவருடைய குடும்பத்தினர், நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அரசியல் அனுபவம் மிகவும் குறைவுதான் என்றாலும் அதேசமயம் இளம் வயது அதனால் சரியான பக்குவம் இல்லாதவர் என்பது போன்ற விமர்சனங்கள் அவர் மீது தேர்தல் பிரச்சாரத்தின் போது எழுந்தது.ஆனால் தற்போது அவர் செய்த இந்த செயல் காரணமாக, திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் அவருடைய இந்த செயலை மூக்கின் மீது விரல் வைத்தவாறு கவனித்து வருகிறார்கள்.

Exit mobile version