பாடகர் உதித் நாராயணன்:
இந்திய சினிமாவில் பிரபலமான திரைப்பட பாடகர் ஆன உதித் நாராயன் ஹிந்தி , தமிழ், கன்னடம், ஒடியா, நேபாளி, போஜ்புரி, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திரைப்பட பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் இதுவரை நான்கு தேசிய திரைப்பட விருதுகளை வென்றிருக்கிறார்.
உதித் நாராயணன் பாண் இந்தியா பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் 5 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார். 20க்கும் மேற்பட்ட முறை பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 80களில் சிறப்பான திரைப்பட பாடகராக அனைவரது மனம் கவர்ந்த பாடகராக இருந்து வந்தார் உதித் நாராயன்.
தன்னுடைய வித்தியாசமான குரலால் டூயட் பாடல்களை பாடி அசத்தியவர். தற்போது இவருக்கு 70 வயதாகிறது. நேபாளத்தை சொந்த ஊராகக் கொண்ட உதித் நாராயணன் சமீபத்தில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி ஒன்றில் அநாகரிகமாக நடந்துக்கொண்டது சமூக வலைதளங்கள் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது.
மேடையில் நாகரீகம்:
இந்நிலையில் கச்சேரி ஒன்றில் “டிப் டிப் பரசா பானி” என்ற பாடலை உதித் நாராயணன் பாடிக்கொண்டிருந்த போது அவருடைய தீவிர ரசிகை ஒருவர் அவருடன் புகைப்படம் எடுப்பதற்காக ஓடி வந்து மேடையில் இருந்த அவரை அழைத்தார். அப்போது செல்பி எடுக்கும்போது ஒரு ரசிகை பாடகர் உதித் கன்னத்தில் முத்தமிட்டார்.
பதிலுக்கு உதித் நாராயணனும் யாரும் எதிர்பார்க்காத விதமாக அந்த ரசிகையின் உதட்டில் முத்தம் கொடுத்து விட்டார். இந்த வீடியோ இணையத்தில் மோசமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அதை தொடர்ந்து செல்பி எடுக்கும் ரசிகைகள் சிலருக்கு கன்னத்திலும் உதட்டிலும் முத்தம் இடுகிறார் என உதித் நாராயணன் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி விமர்சிக்கப்பட்டது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உதித் நாராயணனுக்கு மேடை நாகரிகம் என்பது தெரியாதா? 60 வயது ஒரு பாடகர் இளம் வயது பெண்ணுக்கு இப்படி உதட்டில் முத்தம் கொடுப்பது சரி இல்லை என அவரை கடுமையாக
விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான உதிர் நாராயணன் அது குறித்து விளக்கம் கொடுத்திருப்பதாவது…. நான் எனது குடும்பத்தையோ நாட்டையோ தலைகுனிய வைக்கும் செயலை செய்யவில்லை .
சர்ச்சைக்கு விளக்கம்:
பல மாதங்களுக்கு முன்பே எனது இசை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. எனக்கும் எனது ரசிகர்களுக்கும் இடையில் ஆழமான பிணைப்பு உள்ளது. எங்கள் அன்பின் வெளிப்பாடு தான் அந்த வீடியோ. என்னை அவர்கள் நேசிப்பதைப் போலவே நானும் அவர்களை அதிகமாக நேசிக்கிறேன்.
என்னுடைய இதயம் தூய்மையானது அன்பினால் நடந்த ஒரு செயலை சிலர் அசிங்கமாக பார்த்ததால் அவர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். அதே நேரத்தில் அவர்களுக்கு நன்றியும் தெரிவிக்க விரும்புகிறேன். ஏனென்றால் முன்பிருந்ததை விட நான் தற்பொழுது மிகவும் பிரபலமாக இருக்கிறேன் என உதித் நாராயணன் இந்த பதிவில் கூறியிருக்கிறார்.