உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி கடும் எச்சரிக்கை!
பல்கலைகழக மானிய குழு உயர் கல்வி நிறுவனங்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சேர்க்கை செயல் முறையில் சில புதிய கட்டுபாடுகளை அமல்படுதியுள்ளது.கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழக மானியங்கள் ஆணையமான யுஜிசி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் தற்போதைய சேர்க்கை செயல்முறையின் போது, ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மற்றொரு
கல்வி நிறுவனத்திற்கு இடம் பெயர விரும்பும் மாணவரின் முழு கட்டணத்தையும் திரும்பப் பெற, தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அது மட்டும் இன்றி அந்த மாணவரின் சான்றிதல்களையும் திரும்ப அவரிடம் ஒப்படைக்க
வேண்டும், இந்த கட்டுபாடுகளை மீறும் பட்சத்தில் அந்த கல்வி நிறுவனம் ஆணையத்திடம்
இருந்து நிதியை பெறுவதற்கான தகுதியை இழக்க நேரிடும் என அந்த அறிவிப்பில்
கூறப்பட்டுள்ளது.
இப்போது மத்திய பல்கலைகழகத்தில் இடம்பெயர விரும்பும் சில மாணவர்களின் UGC உத்தரவை மீறி அவர்களின் மீது கல்வி நிறுவனங்கள் அபராதம் விதிக்கின்றன இதை தடுக்கும் விதமாக இந்த புதிய அறிவிப்பை UGC வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் உயர் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
CUET , பங்கேற்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலைசேர்க்கைக்காக முதல் முறையாக தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டது. CUET-UG முடிவுகள் செப்டம்பர் 16-ஆம் தேதியும், CUET-PG முடிவுகள் செப்டம்பர் 26-ஆம் தேதியும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் , இந்த அறிவிப்பை யுஜிசி வெளியிட்டுள்ள்ளது.