அச்சோ.. இந்த அறிகுறிகள் எல்லாம் தென்படுகின்றதா? ஆபத்து உங்களை நெருங்குகிறது!

0
171

அச்சோ.. இந்த அறிகுறிகள் எல்லாம் தென்படுகின்றதா? ஆபத்து உங்களை நெருங்குகிறது!

நம் உடலில் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக இருப்பதே வைட்டமின்கள் தான். உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து உடலின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது. வைட்டமின்கள் நம் உடலில் குறைந்தால் என்ன விதமான அறிகுறிகள் தோன்றும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வைட்டமின்களை எந்த ஒரு செயற்கை முறையிலும் இல்லாமல் இயற்கையாக எப்படி நம் உடலுக்கு கிடைக்கும் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

வைட்டமின்கள் ஏ, பி, சி, டி, இ, கே என பல்வேறு வகைகளில் இருக்கின்றது. அவை ஒவ்வொன்றும் தனித்துவத்தை கொண்டுள்ளது.  நீரில் கரையும் வைட்டமின்கள் மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் எனவும் உள்ளது.

வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால் முதலில் கண்பார்வையில் தான் பாதிப்பு ஏற்படும், உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையும். அது மட்டும்மின்றி குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு உடல் வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சிகளில் பாதிப்புகள் ஏற்படும் பெண்களுக்கு கருச்சிதைவை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

வைட்டமின் ஏ குறைபாடு நீங்க பூசணிக்காய், சர்க்கரை வள்ளி கிழங்கு, கேரட், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம் நிறைந்த காய்கறிகள், மாம்பழம், மணத்தக்காளி கீரை, தக்காளி, முட்டை, பால் போன்ற ஏதேனும் ஒன்றினை நம் தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி குறைபாடு ஏற்பட்டால் மூச்சு திணறல், மயக்கம், தலைசுற்றல், தலைவலி, உடல் ஆற்றல் இல்லாமை போன்றவைகள் அறிகுறிகளாக ஏற்படும்.

பட்டாணி, வாழைப்பழம், நட்ஸ், ஆட்டின் ஈரல், பால், முட்டை, காளான், இறைச்சி, மீன், கோதுமை, சிக்கன், வேர்கடலை, சோயாபீன்ஸ், ஓட்ஸ் போன்ற வகைகள் வைட்டமின் பி1 வைட்டமின் பி2 வைட்டமின் பி3 வைட்டமின் பி5 வைட்டமின் பி6 சத்துக்கள் நிறைந்த உணவுகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகையால் இதில் ஏதேனும் ஒரு வகையான உணவை கண்டிப்பாக தினம்தோறும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி குறைபாடு இருந்தால் பற்களில் ஈறுகளில் ரத்தம் கசிதல் பலவீனம் சோர்வு போன்றவைகள் ஏற்படும் அதனை நீக்க நாம் தினந்தோறும் எடுத்துக் கொள்ளும் உணவில் மிளகாய், பிரக்கோலி, உருளைக்கிழங்கு, அண்ணாச்சி, பப்பாளி, ஸ்ட்ராபெரி போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்வது சிறந்தது.