நாம் சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய உணவுப் பொருள் வெங்காயம்.இதில் சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் என இரண்டு வகை இருக்கிறது.இந்த வெங்காயத்தை உணவு சமைக்க பயன்படுத்துவதற்கு முன்னர் அதன் தோலை நீக்கிவிடுவோம்.ஆனால் இந்த வெங்காயத் தோலில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இவை பல வழிகளில் நமக்கு பயன்படக் கூடிய ஒன்று.
வெங்காயத் தோலில் டீ செய்து அருந்தி வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.இந்த வெங்காயத் தோலில் டீ செய்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் அலர்ஜியை குறைக்க உதவுகிறது.வெங்காயத் தோல் ஊறவைத்த நீரை அருந்தி வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ,சி,பொட்டாசியம்,கால்சியம் மற்றும் மினரல்ஸ் அதிகம் நிறைந்திருக்கிறது.இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.வெங்காயத் தோல் ஊறவைத்த நீரை தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
வெங்காயத் தோல் சாறு சரும அலர்ஜியை போக்க உதவுகிறது.வெங்காயத் தோலை அரைத்து சாறு எடுத்து சருமத்தில் பூசி வந்தால் அரிப்பு,எரிச்சல் போன்றவை சரியாகும்.சருமத்தில் காயங்கள் மற்றும் கொப்பளங்கள் இருந்தால் அதை குணப்படுத்த வெங்காயத் தோலை அரைத்து அதன் மீது பூசலாம்.வெங்காயத் தோலில் அரைத்து அவுரி பொடியில் கலந்து தலை முடிகளுக்கு தேய்த்து குளித்தால் நரைமுடி அனைத்தும் கருமையாகும்.