Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உக்ரைனில் தொடர்ந்து தீவிரமடையும் ரஷ்யாவின் தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தாக்குதல் இன்று 22வது நாளாக நீடித்து வருகிறது தலைநகரில் எடுக்கும் மரியுபோல்,,கார்கிவ், போன்ற முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் மிகக் கடுமையாக நடைபெற்று வருகிறது.

துறைமுக நகரமாக விளங்கி வரும் மரியுபோலில் போர் தொடங்கிய நாளிலிருந்து தாக்குதல் அதிகமாக நடைபெற்று வருகிறது. முக்கிய துறைமுக நகரமான அந்த நகரத்தில் இருக்கின்ற கட்டுமானங்களை உருக்குலைத்து ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை குண்டுகளை வீசி வருகிறது என்று சொல்லப்படுகிறது.

அதோடு மரியுபோல் நகரிலிருந்து வெளியேறும் மக்களை ரஷ்ய படைகள் தடுத்து நிறுத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. அந்த நகரின் தவித்து வரும் மக்கள் பதுங்கு குழிகளிலும், கட்டிடங்களின் அடித்தளங்களிலும் தவித்தபடி வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அந்த நகரில் உள்ள திரையரங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சம் புகுந்து இருந்தார்கள் அந்த திரையரங்கு மீது ரஷ்யா குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த தாக்குதலில் திரையரங்கு முற்றிலும் சேதமடைந்தது என்றும் சொல்லப்படுகிறது. அதோடு அதில் பலர் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த பொதுமக்கள் கதி என்ன என்பது தொடர்பாக இதுவரை எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக அந்த நகரத்தின் உள்ளூர் கவுன்சில் வெளியிட்ட தகவலினடிப்படையில், ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் தஞ்சமடைந்த திரையரங்கை அழித்திருக்கிறார்கள். இதை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ஆனாலும் திரையரங்கு மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா மறுப்பு தெரிவித்து வருகிறது. அந்த நகரில் இதுவரையில் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அங்கே 13 நாட்கள் தண்ணீர், மின்சாரம், உள்ளிட்டவையின்றி பொதுமக்கள் தவித்து வருகிறார்கள் என்றும், இன்னும் அந்த நகருக்குள் 4 லட்சம் பேர் சிக்கியிருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

போர் ஆரம்பித்து 3 வார காலம் கடந்து விட்ட சூழ்நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ்விலுள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்ற முடியாமல் திணறி வருகின்றன.

தலைநகரின் புறநகர் பகுதிகளை சுற்றி வளைத்திருக்கின்ற ரஷ்ய படைகள் அங்கே தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதே போல தலைநகருக்குள்ளும் ஏவுகணைகளை வீசி வருகிறது ரஷ்யப் படைகள்.

ஆனாலும் ரஷ்யப் படையால் தலைநகருக்குள் இன்னமும் நுழைய முடியவில்லை. அவர்களுக்கு எதிராக உக்ரைன் இராணுவத்தினர் கடுமையாகப் போர் செய்து வருகிறார்கள் 2வது பெரிய நகரமான கார்கிவிலும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

அதே போன்று மற்ற நகரங்களிலும் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்தபடி உள்ளதாகவும், வான்வழி தாக்குதலுக்கான அபாய எச்சரிக்கை ஒலி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், ரஷ்யாவின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவித்திருக்கிறது. தாக்குதல் நடத்த வந்த ரஷ்ய விமானங்களை உக்ரைன் நாட்டு ராணுவத்தை சார்ந்தவர்கள் தாக்கியழித்தார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Exit mobile version