Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எங்கள் மீது ரஷ்யா மிகக்கொடுமையான தாக்குதல்களை தொடுக்கிறது! உக்ரைன் அதிபர் வேதனை!

உக்ரைன் நாட்டின் மீது தன்னுடைய அண்டை நாடான ரஷ்யா கடந்த 24ஆம் தேதி ஒரு தொடுத்தது இரண்டு வார காலமாக இடைவிடாது இந்த போர் நீடித்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யப் படைகள் தங்களுடைய தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

ஆனாலும் கூட மனிதாபிமான அடிப்படையில் கடந்த சில நாட்களாக தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா தலைமை அறிவித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்திருக்கின்ற குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தினர் என்று உக்ரைன் அரசு குற்றம்சாட்டி இருக்கிறது இந்த தாக்குதலில் மிகப் பெரிய சேதம் உண்டானது என்று கூறப்பட்டது.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவிக்கும்போது மறியலில் இருக்கின்ற குழந்தைகள் மருத்துவமனை மீதான தாக்குதலில் 17 பேர் படுகாயமடைந்தார்கள்.

ஈடுபாடுகளில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் சிக்கியிருக்கிறார்கள். மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகள் வழியாகச் செல்கிறார்கள். இது மிகவும் கொடுமையானது என்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version