Project K திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் உலகநாயகன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்!!

0
251
#image_title

Project K திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் உலகநாயகன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்!

நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் ப்ரொஜெக் கே திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ப்ரொஜெக்ட் கே திரைப்படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பட்டானி மற்றும் பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

பேன் இந்தியா படமாக மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் ப்ரொஜெக்ட் கே திரைப்படத்தை விஜயசாந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ப்ரொஜெக்ட் கே திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரொஜெக்ட் கே திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க 20 நாட்கள் கால் ஷீட் கொடுத்துள்ளதாகவும் மேலும் இந்த திரைப்படத்திற்காக 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ப்ரொஜெக்ட் கே திரைப்படம் அடுத்த வருடம் அதாவது 2024வது வருடம் ஜனவரி 12ம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.