சமையல் எண்ணெய் சில்லறை விற்பனைக்கு தடை விதித்த தமிழக அரசு – அதிர்ச்சியில் வியாபாரிகள்

0
144

ஜூன் 1ம் தேதியிலிருந்து சமையல் எண்ணெயை பாக்கெட்டில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது நல்லெண்ணை, கடலை எண்ணை உட்பட எண்ணைகள் சில்லறையாக மக்கள் வாங்கி வருகிறனர். ஆனால் சில்லறையாக விற்க்கப்படும் எண்ணையில் கலப்படம் செய்யப்படுவதாக புகாழ் எழுந்தது. இதனையடுத்து சில்லறை விற்ப்பனைக்கு தடை விதிக்கப்பட, வியாபாரிகள் அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து இதை ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டு, ஆய்வு நடத்தப்படது.

அது அளிக்கப்பட்ட பரிந்துரையின் பெயரில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் பாக்கெட்டில் மட்டுமே எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

கொரோனா பாதிப்பால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக மூடியிருந்த தொழிற்சாலைகளில் தற்போதுதான் உற்பத்தி செய்ய துவங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு வரும் ஜூன் 1ம் தேதி முதல் சமையல் எண்ணெய் சில்லறை விற்பனைக்கு தடை விதித்திருப்பது எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து எண்னை வியாபார்கள் “இளைஞர்கள் பலர் செக்கு எண்ணெய் உற்பத்தியை சுயதொழிலாக செய்கின்றனர் .இவற்றை பேக்கிங் செய்து விற்பது சிரமமானது. சில்லறை விற்பனைக்கு தடை விதிப்பது சிறு வணிகர்களை பாதிக்கும். தனியாக பேக்கிங் உரிமம் எடுக்க வேண்டியிருக்கும் என்பதால் சிறிய அளவிலான உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார சுமையும் ஏற்படும். இந்த உத்தரவுகள் பெரிய நிறுவனங்களுக்கே சாதகமாக அமையும். கொரோனா காலத்து தாக்கத்திலிருந்து இன்னும் மீளாத நிலையில், கருவிகள் வாங்கி பேக்கிங் செய்து, இதற்கான பணிகள் மேற் கொள்வதும் சிரமத்திற்குரியது. இதனால் ஒரு லிட்டருக்கு ₹15 வரை விலை உயர்வுக்கும் வழிவகுக்கும். எனவே, ஜூன் 1ம் தேதி முதல் பேக்கிங் கட்டாயம் என்ற உத்தரவை, குறைந்தது ஓராண்டு கழித்து அமல்படுத்த பரிசீலிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளர்.

ஆனால் அரசு தரப்பிலோ “எண்ணெய் சில்லறை விற்பனைக்கு 2006ம் ஆண்டு முதலே தடை உள்ளது. 2011லும் கூடுதல் சட்டம் இயற்றி கடுமைப்படுத்தப்பட்டுள்ளது. நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தை, ஆயில் கமிட்டி முடிவின் கீழ் ஜூன் 1ல் மீண்டும் செயல்படுத்தும் விதமாகவே அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கலப்படம் தடுக்கவும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் பலளிக்கும். இதற்கென வணிகர்களுக்கு போதிய கால அவகாசமும் தரப்பட்டிருக்கிறது” என்கின்றனர்